தமிழ்நாட்டின் ஐடி சேவை துறை தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இத்துறையில் மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு டைடல் பார்க் வாயிலாக ஒரு புதிய முயற்சியை எடுத்தது. மாநிலம் முழுவதும் இருக்கும் படித்த பட்டதாரிகள் ஐடித் துறையில் பணியாற்றுவதில் ஆர்வமாக இருப்பது மட்டும் அல்லாமல் அதற்கான திறனையும் வளர்த்துக்கொள்ளத் தயாராக உள்ளனர். இதேவேளையில் இந்திய டெக் நிறுவனம் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு நிறுவனங்களும் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் தங்கள் அலுவலகத்தைத் திறக்க தயாராகி வந்தனர்.
இந்த இரண்டு முனைகளையும் இணைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு டைடல் நியோ என்ற மினி ஐடி பூங்காக்களை மாநிலத்தின் சிறிய நகரங்களில் உருவாக்கத் துவங்கியது. அரசே இத்தகைய திட்டத்தை அறிவிக்கும் போது தனியார் துறையும் இதற்கு போட்டியாகக் களத்தில் இறங்கும் என்பதால் சிறிய நகரங்களில் ஐடி நிறுவனங்கள் வர துவங்கியது.

இப்படி தமிழ்நாடு அரசு அறிவித்த நான்கு புதிய நியோ டைடல் ஐடி பூங்கா தற்போது கட்டப்பட்டு முழுமையாக தாயர் நிலையில் உள்ளது. இதில் அலுவலகம் அமைக்க நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது, இதன் மூலம் அடுத்த சில மாதத்தில் 4 நியோ டைடல் பார்க்கும் படு பிசியாக செயல்படத் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியோ டைடல் பார்க் என்பது, டைடல் பார்க்கின் சிறிய வடிவமாகும். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சிறிய ஐடி நிறுவனங்கள் செயல்படுவதற்கு வேண்டிய வசதிகளைக் கொண்ட பூங்காக்கள் "டைடல் நியோ பார்க்" என்று அழைக்கப்படுகின்றன. டைடல் நியோ பார்க் என்பது 50000 சதுரடி முதல் 1 லட்சம் சதுரடி வரையிலான இடத்தில் அமைக்கப்படுபவை.
ரெடியாகி இருக்கும் நியோ டைடல் ஐடி பார்க்குகள் :
விழுப்புரம்: இந்த புதிய ஐடி பார்க் சுமார் 63,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இது, விழுப்புரம் மாவட்டத்தில் ஐடி துறை நிறுவனங்கள் அலுவலகங்களை அமைத்து விரிவடையச் சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.
சேலம்: சேலம் நகரில் கருப்பூர்-க்கு அருகில் 55,000 சதுர அடி பரப்பளவில் டைடல் நியோ மினி ஐடி பார்க் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இது சேலம் ஐடி துறையின் வளர்ச்சிக்கு புதிய அத்தியாமாக விளங்கும்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், 55,000 சதுர அடி பரப்பளவில் டைடல் நியோ மினி ஐடி பார்க் அமைக்கப்பட்டு அலுவலகம் அமைக்க தயார் நிலையில் உள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி நகரில் 63,100 சதுர அடி பரப்பளவில் டைடல் நியோ மினி ஐடி பார்க் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த புதிய ஐடி பார்க் தென் தமிழ்நாட்டில் புதிய உற்பத்தி நகரமாக இருக்கும் தூத்துக்குடி-யில் ஐடி துறைக்கும் வளர்ச்சி வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் டைடல் பார்க் நிறுவனம், இந்த புதிய டைடல் நியோ மினி ஐடி பார்க்குகளில் அலுவலகங்கள் அமைக்க விரும்பும் IT/ITES நிறுவனங்களிடமிருந்து விருப்ப விண்ணப்பத்தை (Expression of Interest - EOI) கோருகிறது. இந்த புதிய ஐடி பூங்காக்கள் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும் எனவும், தடையற்ற மின்சார வசதி, அதிவேக இண்டர்நெட் இணைப்பு, பாதுகாப்பு வசதிகள் போன்ற அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் வழங்கும் எனவும் டைடல் பார்க் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஐடி பூங்காக்கள் போக்குவரத்து வசதிமிக்க இடங்களில் அமைக்கப்படுவதால், ஊழியர்கள் எளிதாக அலுவலகத்திற்கு சென்று வர முடியும்.இந்த புதிய டைடல் நியோ மினி ஐடி பார்க்குகள் மூலம், தமிழ்நாடு முழுவதும் ஐடி துறை விரிவடைந்து, மாநிலம் முழுவதும் திறமையான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

Click it and Unblock the Notifications