இனி சென்னையில் வீடு வாங்குவது வேஸ்ட்.. கோவை, சேலம், மதுரை தான் பெஸ்ட்..!

இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் எல்லாம் ரியல் எஸ்டேட் மதிப்புகள் உச்சத்தில் இருக்கும் இந்த நிலையில் புதிதாக வீடு வாங்க வேண்டும் என எண்ணும் பலரும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை நோக்கி கவனத்தை திருப்பி உள்ளனர்.

சென்னை, பெங்களூர் ,டெல்லி என இந்தியாவின் முன்னணி மெட்ரோ நகரங்களில் எல்லாம் ரியல் எஸ்டேட் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. நகரின் மையப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்றால் கூட 1.5 கோடி ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த சூழலில் தான் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என எண்ணும் பலரும் மெட்ரோ நகரங்களை விட்டுவிட்டு இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இனி சென்னையில் வீடு வாங்குவது வேஸ்ட்.. கோவை, சேலம், மதுரை தான் பெஸ்ட்..!

மாநில அரசுகளும் பெருநகரங்களை விடுத்து அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பல்வேறு வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துவதால் பலருக்கும் இது சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இந்தியாவின் 60 நகரங்களில் ரியல் எஸ்டேட் துறை தொடர்பாக கிரெடாய் அண்மையில் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டது . இதன்படி 2024 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கையகப்படுத்திய 3,294 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் 44 சதவீதம் வளர்ந்து வரக்கூடிய இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் தான் இருக்கிறது என குறிப்பிடுகிறது.

மேலும் இந்தியாவின் 60 நகரங்களில் 2024ஆம் ஆண்டில் 6.81 லட்சம் வீடுகள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 23 சதவீதம் அதிகரித்து இருக்கிறதா ம். இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆடம்பர மற்றும் சொகுசு வீடுகளின் விற்பனையும் தேவையும் அதிகரித்திருக்கிறது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மலிவு விலை வீடுகளின் தேவையும் உயர்ந்துள்ளது என கூறுகிறது.

2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் முக்கியமான 60 நகரங்களில் 1 முதல் 2 கோடி ரூபாய் வரை மதிப்பு கொண்ட வீடுகள் 1,32,532 என்ற எண்ணிக்கையில் விற்பனையானது, 2 கோடி ரூபாய்க்கு மேல் விலை கொண்டு நவீன சொகுசு இல்லங்கள் விற்பனை 73 சதவீதம் அதிகரித்துள்ளது. இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மலிவு விலை வீடுகள் மட்டும் இல்லாமல் ஆடம்பர வீடுகளின் விற்பனையும் அதிகரித்து இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

மெட்ரோ நகரங்களில் மட்டும்தான் நவீன சொகுசு குடியிருப்புகள் இருக்க வேண்டும் என்ற சூழல் மாறி இரண்டாம் நிலை நகரங்களில் எல்லாம் தற்போது இது போன்ற குடியிருப்புகள் வரத் தொடங்கி விட்டன என குல்சன் குழுமத்தின் தலைவர் தீபக் கபூர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பின்னர் பலரும் ரிமோட் முறையிலான பணிகளுக்கு மாறி வருவதால் அவர்கள் நகரங்களை விடுத்து இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் குடிப்பெயர விரும்புகின்றனர்.

தற்போது சொந்தமாக வீடு வாங்கக்கூடிய நபர்கள் அந்த பகுதியின் வாழ்க்கை தரம் எப்படி இருக்கிறது சுத்தமான காற்று இருக்கிறதா என்பன உள்ளிட்டவற்றை எல்லாம் கவனித்து தான் வீடு வாங்கும் முடிவை எடுக்கிறார்கள். மாநில அரசுகளின் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்பு அறிவிப்புகள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு வித்திடுகின்றன என இந்த துறை சார்ந்த நபர்கள் கூறுகின்றனர். புதிதாக வீடு வாங்க விரும்புபவர்கள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும் என அறிவுரை வழங்குகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+