சென்னை-யை காட்டிலும் கோவை, மதுரை வேற லெவல்..!

இந்தியாவில் ஐடி முதல் உற்பத்தி துறை வரையில் அனைத்து நிறுவனங்களும் நீண்ட கால வளர்ச்சி அடிப்படையில் பெரு நகரங்களை காட்டிலும் 2ஆம் தர நகரங்களில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகின்றனர்.

இதன் எதிரொலியாக கோவை, மதுரை போன்ற 2ஆம் தர நகரங்களில் அலுவலக இடம் மற்றும் ரீடைல் கடைகளுக்கான இடத்திற்கான டிமாண்ட், விலை அதிகரித்துள்ளது.

இதனால் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் துறையும் 2ஆம் தர நகரங்களில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.

சிறு நகரங்கள்

சிறு நகரங்கள்

இந்தியாவில் பல முன்னணி ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஊழியர்களை தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவும், வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் பெரு நகரங்களை விடுத்து சிறு நகரங்களுக்கு படையெடுத்து வருகிறது.

முக்கிய கடைகள்

முக்கிய கடைகள்

இதனால் 2ஆம் தர நகரங்களில் வர்த்தக சந்தையும் மாறியுள்ளது, நிறுவனங்களின் விரிவாக்கம் காரணமாக Wooden Street, Birkenstock, Biba, Uniqlo, Tim Hortons, ஆதித்யா பிர்லா-வின் Tasva உட்பட பல முன்னணி பிராண்டுகள் தனது வர்த்தகத்தை 2ஆம் தர நகரங்களுக்கு வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது.

முக்கிய நகரங்கள்

முக்கிய நகரங்கள்

இதன் எதிரொலியாக சண்டிகர், ஜெய்ப்பூர், அகமதாபாத், கொச்சி, திருவனந்தபுரம், லக்னோ, இந்தூர், புவனேஷ்வர், விசாகப்பட்டினம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் அலுவலக இடம் மற்றும் ரீடைல் கடைகளுக்கான இடத்திற்கான டிமாண்ட், விலை அதிகரித்துள்ளது.

முதலீடு

முதலீடு

இதேபோல் பெரு நகரங்களில் இருந்து வர்த்தகத்தை 2ஆம் தர நகரங்களுக்கு மாற்றப்படும் காரணத்தால் ஸ்டார்ட்அப் முதலீடு முதல் ரியல் எஸ்டேட் முதலீடு வரையில் அனைத்து பிரிவுகளின் முதலீட்டு முறையில் மாற்றம் ஏற்படும். இது 2ஆம் தர நகரங்களுக்கு பெரிய அளவில் நன்மை அளிக்கும்.

வளர்ச்சி

வளர்ச்சி

இது 2ஆம் தர நகரங்களின் வளர்ச்சி பாதையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல், வேலைவாய்ப்பு, பொருளாதாரம், தனிநபர் வருமானம் உட்பட அனைத்து பிரிவுகளின் வளர்ச்சியை மேம்படுத்தும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+