அமெரிக்க நீதிமன்றம் டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்காவில் தடை செய்ய உத்தரவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த நிலையிலும் அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் 75 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். இந்த 75 நாட்களுக்குள் டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட வேண்டும்.
இதனால் டிரம்ப் 75 நாட்கள் அவகாசம் கொடுத்த உடன் டிக்டாக்-ஐ வாங்க பல தரப்பினர் போட்டிப்போட துவங்கியுள்ளனர். இது கடைசி வாய்ப்பாக இருக்கும் வேளையில் டிக்டாக்கை டிரம்ப் தடை செய்வதற்கு முன் இதற்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைக்கு தற்போது டிக்டாக்-ன் தாய் நிறுவனமான பைட்டான்ஸ்-ம் வந்துள்ளது.

இந்த நிலையில் டிக்டாக்-ஐ வாங்க பல பெரும் தலைகள் உடன் பிரபல யூடியூபருமான மிஸ்டர் பீஸ்ட்-ம் களத்தில் இறங்கியுள்ளார். வேலை வாய்ப்பு தளமான Employer.com நிறுவனத்தின் சிஇஓ ஜெசி டின்ஸ்லி உடன் யூடியூபர் MrBeast இணைந்து டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவை வாங்குவதற்கு விருப்ப ஒப்பந்தத்தை சமர்ப்பித்துள்ளார்.
டிக்டாக்-ஐ வாங்குவதில் மிஸ்டர் பீஸ்ட் கூட்டணி முன்னணியில் இருந்தாலும் எலான் மஸ்க், அமேசான் மற்றும் ஒரேக்கிள் போன்ற தொழில்நுட்ப பெரும் தலைகளும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன. இதனால் போட்டி தாறுமாறாக இருக்கும், இதற்கு முன்பு இப்போட்டியில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் அமெரிக்க பில்லியனரான Frank McCourt தலைமையிலான கூட்டமைப்பும் டிக்டாக்-ஐ வாங்கும் கூட்டத்தில் அடங்கும். டிக்டாக் வெறும் பொழுதுபோக்கு தளமாக மட்டும் அல்லாமல் வளம்பர வருவாய் ஈட்டும் முக்கிய தளமாகவும் உள்ளது. அமெரிக்காவில் மட்டும் இந்நிறுவனம் 170 மில்லியன் வாடிக்கையாளர்களை வைத்துள்ளது.
டிக்டாக்-ன் வெற்றி அமெரிக்காவில் இயங்கி வரும் பல சீன நிறுவனங்களின் வர்த்தக எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றும். அதாவது டிக்டாக் போல் வேறு எதாவது சீன நிறுவனத்தின் மூலம் தகவல் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் போது இதே கட்டமைப்பில் வர்த்தகத்தை காத்துக்கொள்ள முடியும்.
டிக்டாக்கின் சீன தாய் நிறுவனமான ByteDance நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு வழங்கிய உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முழு தடையைத் தவிர்க்க, இந்த 75 நாள் காலக்கெடுவுக்குள் தனது அமரிக்க கிளை நிறுவனத்தை சீன நிறுவனம் அல்லாத வேறு ஒரு நிறுவனத்திடம் விற்பனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதை எதிர்த்து டிக்டாக் வழக்கு தொடுத்தும் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் டிரம்ப் இந்த 75 நாள் கால அவகாசம் கொடுத்துள்ளார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications