அமெரிக்க நீதித்துறைக்கும், அமெரிக்க அரசுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கும் சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டிக்டாக் தற்போது முக்கியமான கட்டத்தில் உள்ளது.
டிரம்ப்-ன் முதல் ஆட்சிக் காலத்திலேயே டிக்டாக் தடை செய்யப்பட வேண்டும் என கருத்துக்கள் எழுந்தது மட்டும் அல்லாமல் அமெரிக்க மக்களின் தரவுகள் பாதுகாக்கப்பட டிக்டாக்-ன் அமெரிக்க வர்த்தகம் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கப்பட்டு கூட்டணியாக நிர்வாகம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து பைடன் ஆட்சிக் காலம் முழுவதும் சீனாவின் பைட்டான்ஸ் அமெரிக்க நீதிமன்றத்தில் வாதிட்டு வந்தது. இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வர உள்ள நிலையில் டிக்டாக் தொடர்பான பிரச்சனை சூடுபிடித்துள்ளது. மட்டும் அல்லாமல் டிக்டாக்-ஐ காப்பற்ற ஆபத்பாந்தவனாக எலான் மஸ்க் இருப்பார் என்ற கருத்து நிலவுகிறது.
அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் அச்சுறுத்தல் டிக்-டாக் நிறுவனத்தின் மீது தொடர்ந்து இருக்கும் வேளையில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் இந்த தடைக்கு எதிராக டிக்-டாக் தீவிரமாக முறையீடு செய்தும் பலன் இல்லாமலும், தடை உத்தரவு நீக்கப்பட வாய்ப்பு இருக்காது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தடை உத்தரவு டிரம்ப் ஆட்சிக்கு வந்த சில காலத்திலேயே அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், சீன அதிகாரிகள் மாற்றுத் திட்டங்களை ஆராய்ந்து வருகின்றனர். அவற்றில் ஒன்று தான் எலான் மஸ்க் உதவியை நாடுவது. எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் 250 மில்லியன் டாலர் தொகையை நிதியுதவி செய்து டிரம்ப் வெற்றி பெற உதவி செய்துள்ளார். இதேவேளையில் DOGE அமைப்பின் தலைவராக பணியாற்றுவது மூலம் டிரம்ப் அரசின் முக்கிய நம்பிக்கை நாயகனாக டிரம்ப் இருக்கிறார்.
இந்த நிலையில், டிக்-டாக் தனது தாய் நிறுவனமான பைட்டான்ஸ் கட்டுப்பாட்டில் இருப்பதே சீன அரசின் விருப்பம் என்றாலும், அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அமெரிக்க நிறுவனத்தின் உதவி தேவைப்படுகிறது. இந்த நிலையில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் நம்பிக்கை அளிக்கக் கூடிய நபராகத் திகழும் எலான் மஸ்க்-ன் எக்ஸ் நிறுவனத்திற்கு டிக்டாக் அமெரிக்க வர்த்தகத்தின் பங்குகளை விற்பது சரியான யோசனையாக இருக்கும் எனக் கருத்து நிலவுகிறது.
சீனாவில் டெஸ்லா மிகப்பெரிய முதலீட்டைச் செய்து பெரிய அளவிலான வர்த்தகத்தைக் கொண்டிருக்கும் காரணத்தால் சீன அரசுடனும், சீன அரசு அதிகாரிகளுடன் எலான் மஸ்க் அவ்வப்போது நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தும் நம்பிக்கைக்குரியவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிக்டாக் சீன நிர்வாகத்தின் கடைசி ஸ்டெப் இதுதான். அமெரிக்க நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தோல்வி அடைந்தால் எலான் மஸ்கின் சமூக ஊடக தளமான எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), டிக்-டாக்-ன் அமெரிக்கச் செயல்பாடுகளை விற்பனை செய்து, தனது தளத்துடன் இணைத்துக்கொள்ளலாம் என்பது தான்.
அமெரிக்காவில் 170 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட டிக்டாக்-ன் மாபெரும் பயனர் தளத்தை மொத்தமாகப் பயன்படுத்தும் வாய்ப்பு எக்ஸ் நிறுவனத்திற்குக் கிடைக்கும். இதேபோல் டிக்டாக் வாடிக்கையாளர் இணைப்பின் வரம்பைக் கணிசமாக விரிவுபடுத்தும் மற்றும் புதிய விளம்பரதாரர்களை ஈர்க்கும்.
மேலும், இந்த கையகப்படுத்துதல் மூலம் எலான் மஸ்க் ஷாட் வீடியோ வர்த்தகத்திலும் இறங்குவார், டிக்டாக் தளத்தை எக்ஸ் தளத்தில் இணைப்பது மூலம் டிக்டாக் செய்யப்பட்ட நாடுகளுக்கும் அறிமுகம் செய்யும் வாய்ப்பு மூலம் கிடைக்கும்.
கடைசியாக எலான் மஸ்க் பெரும் கனவுடன் எக்ஸ் தளத்தில் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான எக்ஸ்ஏஐ சேவையை டிக்டாக் பயன்படுத்தும் வாய்ப்பும் கிடைக்கும்.
இதேவேளையில் டிக்டாக் - எலான் மஸ்க்-ன் எக்ஸ் தளத்திற்கு விற்பனை செய்யப்படும் பேச்சுவார்த்தை அனைத்தும் இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எந்தவொரு உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும், சீன அதிகாரிகள், பைட் டான்ஸ், டிக்-டாக் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் இடையே சில பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகத் தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது, அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
டிரம்ப் அரசு தடை விதிக்கப்பட்ட பின்பு அமெரிக்காவின் டிக்டாக் வர்த்தகத்தை மைக்ரோசாப்ட், ஆரக்கிள் ஆகியவை வாங்குவதற்கு முயற்சி செய்தன. ஆனால் தற்போது எலான் மஸ்க் கைக்கு வருவது போல் உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications