அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் டொனால்டு டிரம்ப்-ன் முதல் ஆட்சிக் காலத்திலேயே டிக்டாக் தடை செய்யப்பட வேண்டும் என கருத்துக்கள் எழுந்தது மட்டும் அல்லாமல் அமெரிக்க மக்களின் தரவுகள் பாதுகாக்கப்பட டிக்டாக்-ன் அமெரிக்க வர்த்தகம் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கப்பட்டு கூட்டணியாக நிர்வாகம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பைடன் ஆட்சிக் காலம் முழுவதும் சீனாவின் பைட்டான்ஸ் அமெரிக்க நீதிமன்றத்தில் வாதிட்டு வந்தது. ஆனாலும் அமெரிக்க நிதீமன்றம் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து டிட்காக் அமெரிக்க செயல்பாடுகளை விற்பனை செய்ய அமெரிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. ஜனவரி 19 ஆம் தேதிக்குள் இந்த விற்பனை நடக்க வேண்டும் என அமெரிக்க அரசு கட்டாயப்படுத்தியுள்ளது.

இதற்கு டிட்காக் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பயனர் தரவுகளை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும், தேசிய பாதுகாப்பு குறித்த அமெரிக்க அரசின் அனைத்து பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்வதாகவும் டிட்காக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் தனது செயல்பாடுகளை எலான் மஸ்க்குக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட மாற்று வழிகளை சீன அரசு ஆராய்ந்து வருவதாக ப்ளூம்பெர்க் வெளியிட்டது.
ஏலம் அல்லது சீன அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை மூலம் இந்த வாங்குதல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவில் டிட்காக் தொடர்ந்து செயல்படவும், அமெரிக்க அரசின் தேசிய பாதுகாப்பு கவலைகளையும் தீர்க்கவும் முடியும் என கூறியிருந்தது.
இந்த செய்திகளை டிட்காக் நிறுவனம் வன்மையாக மறுத்துள்ளது. ப்ளூம்பெர்க் செய்திகளை வெறும் கற்பனை என இந்நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications