டிக்டாக், உலகில் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட பின்னும் பொழுதுபோக்கு பிரிவில் மிகவும் முக்கியமான செயலியாக இருந்து வருகிறது. இப்படியிருக்கையில் டிக்டாக் தளத்திற்கு சீனாவுக்கு அடுத்தப்படியாக அதிகளவிலான வாடிக்கையாளர்களை கொண்டிருக்கும் நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது.
ஆனால் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களை டிக்டாக் செயலி சீனாவுக்கு அனுப்பவதாகவும், டிக்டாக் வாடிக்கையாளர்களின் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டு ஜோ பைடன் அதிபராக இருந்த காலத்தில் டிக்டாக் தளத்தை அமெரிக்காவில் தடை செய்ய வேண்டும் அல்லது அமெரிக்க வர்த்தகத்தில் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பங்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் தரப்பில் பல முறையில், பல கட்டங்களாக சட்ட ரீதியாகவும், அரசு வட்டாரத்திலும் பேராடி தோற்றுப்போனது. பைடன் ஆட்சி காலம் முடிந்து டிரம்ப் ஆட்சிக்கு வந்த உடன் டிக்டாக் நிறுவனத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது, ஆனால் அமெரிக்க வர்த்தகத்தை பங்குப்போடுவதில் இருந்து சற்றும் விலகவில்லை. இதன் விளைவாக டிக்டாக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது.
டிக்டாக் நிறுவனம் அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்பட்ட நிலையில், இதில் இருந்து தப்பிக்க வருட கணக்கில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் டிசம்பர் 18ஆம் தேதி முடிவுக்கு வந்துள்ளது. வியாழக்கிழமை டிக்டாக் தலைமை செயல் அதிகாரி ஷோ சியூ (Shou Chew) ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலிவ், அமெரிக்க முதலீட்டாளர்களுடன் கூட்டணி நிறுவனத்தை உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதன் மூலம் டிக்டாக் அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட முடியும். சீன உரிமையாளர் பைட் டான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஒப்பந்தம் உருவாகியுள்ளது.
புதிய கூட்டணி நிறுவனம்:
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் டிக்டாக்-ன் அமெரிக்க வர்த்தகத்தை தனியாக பிரித்து, புதிய கூட்டணி நிறுவனம் உருவாக்கப்பட்டு அதன் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது, இதில் பையிட் டான்ஸ் மற்றும் அதன் முதலீட்டாளர்கள் ஆகியோர் தொடர்வார்கள். இவர்களை தாண்டி அமெரிக்க தரப்பில் ஓராக்கிள், சில்வர் லேக், அபுதாபியைச் சேர்ந்த MGX ஆகியவை முக்கிய முதலீட்டாளர்களாக இணைய உள்ளனர்.
ஓராக்கிள் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான லாரி எலிசன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நீண்டகால நண்பர். இதேபோல் டிக்டாக்-ஐ துவக்கம் முதல் கைப்பற்றும் போட்டியில் ஓராக்கிள் இருந்து வருகிறது, சமீபத்திய ஏஐ வளர்ச்சியில் ஓராக்கிள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போது இந்த வளர்ச்சியை மேம்படுத்த டிக்டாக் இணைந்துள்ளது.
தற்போது செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் அமெரிக்க வர்த்தகத்தில் பைட் டான்ஸ் முதலீட்டாளர்கள் மூன்றில் ஒரு பங்கு வைத்திருப்பர்கள் கிட்டத்தட்ட 33 சதவீத பங்குகளை வைத்திருப்பார்கள். பைட் டான்ஸ் நிறுவனம் இதில் தனியாக 20 சதவீத பங்கு வைத்திருக்கும். இதன் மூலம் சீன முதலீட்டாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். இந்த அமைப்பு அமெரிக்க சட்டத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்ட டிக்டாக் இனி பாதுகாப்பான செயலியாக பார்க்கப்படும். இதோடு டிக்டாக் அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட முடியும், இதேபோல் தொடர்ந்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை பெறும், இதன் மூலம் யூடியூப் ஷாட்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வர்த்தகம் பாதிக்கப்படலாம்.
இந்தியாவுக்கு மீண்டும் வருமா..?
டிக்டாக் இந்தியாவில் 2020இல் தடை செய்யப்பட்டது. தேசிய பாதுகாப்பு காரணம் தடை செய்யப்பட்ட நிலையில். அமெரிக்காவில் டிக்டாக் புதிய கூட்டணி கீழ் செயல்பட புதிய ரூட்டு போட்டு கொடுக்கப்பட்ட நிலையில், இதேபோல இந்தியாவிலும் மாற்றம் செய்தால் மீண்டும் நுழைவு வாய்ப்பு உருவாகலாம். ஆனால் இந்திய அரசு இதை அனுமதிக்குமா என்பது கேள்வியே..?
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications