அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு அமைய உள்ள வேளையில், ஜனவரி மாதத்தில் இருந்து என்னவெல்லாம் நடக்கும் என்பதை பற்றி பல கதைகள் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில், டிரம்ப் கடந்த ஆட்சியில் செய்த சபதத்தை இந்த ஆட்சியில் நிறைவேற்ற உள்ளதாக தெரிகிறது.
அமெரிக்க அரசு, உலகளவில் பிரபலமான ஷார்ட் வீடியோ ஆப் ஆன டிக்டாக்-ல் ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த அச்சம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. சீன நிறுவனமான ByteDance-க்கு சொந்தமான இந்த ஆப் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து, அதை சீன ராணுவம் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் பல வருடமாக வைக்கப்பட்டு உள்ளது.

இந்த அபாயங்களைத் தணிக்க, அமெரிக்க அரசாங்கம் ஒரு வருடத்திற்குள் அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு டிக்டாக்-ஐ விற்பனை செய்யும்படி கட்டளையிடும் சட்டத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை மாற்றியமைக்க பைட்டான்ஸ் நிறுவனம் மேற்கொண்ட முயற்சிகளை, சமீபத்தில் அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது. டிக்டாக், இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
சட்ட போராட்டத்தில் தோல்வி காரணமாக டிக்டாக் மீது தடை நடைமுறை வந்தால், அமெரிக்காவில் இருக்கும் 170 மில்லியன் அமெரிக்க பயனர்களுக்கு கணிசமான தாக்கத்தை எதிர்கொள்ள உள்ளனர். டிக்டாக் தடை பெற்றால் பல மார்கெட்டிங் நிறுவனங்கள், வீடியோ கிரியேட்டர்கள் பாதிக்கப்படுவார்கள் என முன்கூட்டியே பல்வேறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அமெரிக்க அரசு தரவு பகிர்வு கவலைகளைத் தாண்டி, டிக்டாக்-ன் அல்காரிதம் தவறான தகவல்களையும் பிரச்சாரத்தையும் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமும் உள்ளது. இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு மத்தியிலும், அமெரிக்க அரசுக்கு எதிரான கருத்துக்களை சீனா பரப்பும் என்ற அச்சம் இருப்பது தான் முதலும் முக்கியமான காரணமாக உள்ளது.
குறிப்பாக டிக்டாக் செயலி இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் மற்றும் அமெரிக்க தேர்தல்கள் போன்ற முக்கிய நிகழ்வுகளின் போது தவறான தகவல்கள் பரவுப்புவதற்கு பங்களிப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
டிக்டாக் இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறது மற்றும் அதன் சீன தாய் நிறுவனமான ByteDance இலிருந்து தனியாக பிரித்து செயல்படவும் முயற்சித்து வருகிறது. இருப்பினும், அமெரிக்க அரசின் அச்சம் குறையாத காரணத்தால் இந்த செயலியை தடை செய்ய அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜனவரி மாதம் இறுதிக்குள் அதாவது டிரம்ப் ஆட்சிக்கு வந்த பின்பு தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளேஸ்டோர், டெலிகாம் சேவைகள் வாயிலாக டிக்டாக் அமெரிக்காவில் தடை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications