ஒட்டுமொத்த பொழுதுபோக்கு, டெக் மற்றும் ஊடக துறையும் வீடியோ துறையை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் போது டிக்டாக் பல தடைகளை சந்தித்தாலும், அதன் ஆதிக்கத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து வாடிக்கையாளர்களை தக்க வைத்து அசத்தி வருகிறது.
டிக்டாக்-ன் ஆதிக்கம் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப் ஆகிய அனைத்து முன்னணி சமுகவலைத்தள நிறுவனங்களுக்கு பாதிப்பு என்றாலும் ஷாட் வீடியோ தளத்தில் மட்டுமே டிக்டாக் இருக்கும் காரணத்தால் இதுநாள் வரையில் யூடியூப் பெரிய பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை.
ஆனால் இதற்கும் வேட்டு வைக்கும் முதல் படியை டிக்டாக் எடுத்து வைத்துள்ளது.
டிக்டாக் - சீனா
டிக்டாக் சீனா நிறுவனமாக இருந்தாலும், அதன் சீனா வர்த்தகத்தையும், சர்வதேச வர்த்தகத்தையும் தனிதனியாக பிரித்துள்ளது. இதனால் சீனாவில் Douyin என்ற பெயரிலும், உலக நாடுகளில் டிக்டாக் என்ற பெயரிலும் இயங்கி வருகிறது.
டிக்டாக் புதிய சேவை
இந்த நிலையில் டிக்டாக் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் டிக்டாக் கிரியோட்டர்களுக்கு தங்களது வீடியோ மூலம் பணம் சம்பாதிக்க புதிய பிரிவை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய பியூச்சர் பெயர் Series, இப்பிரிவுக்கு தற்போது சில முக்கியமான தேர்வு செய்யப்பட்ட கிரியேட்டர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
டிக்டாக் Series
இந்த Series பிரிவின் கீழ் ஒரு கிரியேட்டர் நீண்ட நேரம் கொண்ட வீடியோவை அப்லோடு செய்ய முடியும். இதற்கு டிக்டாக் paywall சேவையை அளிக்கிறது. அதாவது ஒரு கிரியேட்டர் Series பிரிவின் கீழ் அப்லோடு செய்யப்படும் வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு வாடிக்கையாளர் குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். இதுதான் paywall கான்செப்ட்.
டிக்டாக் paywall கான்செப்ட்
டிக்டாக் தளத்தில் விளம்பரம் இல்லாத நிலையில் கிரியோட்டர்களுக்கு வருமானம் பெற paywall கான்சப்ட் கொண்டு வரப்பட்டது. இதற்கு முன்பு டிக்டாக் தளத்தில் 15 நொடி, 1 நிமிடம், 3 நிமிடம் அல்லது 10 நிமிடம் வீடியோ மட்டுமே அப்லோடு செய்ய முடியும்.
கட்டணம்
ஆனால் paywall உடன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள டிக்டாக்-ன் புதிய Series பிரிவின் கீழ் ஒரு கிரியேட்டர் 80 வீடியோ வரையில் அப்லோடு செய்ய முடியும். இதற்கு 0.99 டாலர் முதல் 189.99 டாலர் வரையில் கட்டணத்தை வசூலிக்க முடியும். இதன் மூலம் கிரியேட்டர்கள் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை பெற முடியும்.
பிரபலங்கள், செலிப்ரிட்டிகள்
டிக்டாக்-ன் இப்புதிய சேவை கட்டாயம் யூடியூப்-க்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக பிரபலங்கள், செலிப்ரிட்டிகளுக்கு டிக்டாக்-ன் சீரிஸ் சேவை பெரிய அளவில் பலன் அளிக்கும். மேலும் டிக்டாக் - யூடியூப் மத்தியிலான போட்டி இன்று நேற்று துவங்கியது இல்லை பல ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த நிலையில் இந்த சவால்-ஐ யூடியூப்-ன் புதிய சிஇஓ-வாக பொறுப்பேற்றுள்ள நீல் மோகன் எப்படி சமாளிக்க போகிறார் என்பது தான் கவலை.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications