இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட சீனாவைச் சேர்ந்த ஷார்ட் வீடியோ தளமான டிக்டாக், மீண்டும் இந்தியாவில் அறிமுகமாகும் சிக்னல் இன்று மாலை தெரிந்தது. இதற்கு முக்கியமான காரணமாக இருந்தது டிக்டாக் வலைத்தளம் இந்தியாவில் திறந்தது தான்.
இன்று மாலை சில பயனர்களுக்கு டிக்டாக் இணையதள பக்கம் மீண்டும் பயன்படுத்தக்கூடியாத இருந்ததாக தகவல் வெளியானது. இந்தொரு விஷயம் தான் டிக்டாக் செயலி மீண்டும் அறிமுகமாக உள்ளது என தகவல் பரவ முக்கிய காரணமாக இருந்தது.

இந்தியாவில் டிக்டாக் 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேசிய பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பாதுகாப்பு பிரச்சனைகளை காரணம் காட்டி தடை செய்யப்பட்டிருந்தது.
அரசு அதிகாரிகள் விளக்கம்
மத்திய அரசு ஆகஸ்ட் 22, 2025 அன்று, டிக்டாக் மற்றும் அலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சீனாவைச் சேர்ந்த செயலிகள், தளங்கள் இந்தியாவில் தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளன என்று தெளிவுபடுத்தியுள்ளது. சில பயனர்கள் இந்த தளங்களின் இணையதளங்களை அணுக முடிந்ததாக வெளிவந்த அறிக்கைகளுக்கு மத்தியில், மத்திய அரசு இந்த தடையை நீக்கவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் மனிகண்ட்ரோல் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69ஏ பிரிவின் கீழ் டிக்டாக் உள்ளிட்ட பல சீன பயன்பாடுகள் தடை செய்யப்பட்டன. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இந்தியா-சீனா எல்லையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மத்தியில் ஏற்பட்ட தாக்குதல்தளும், இதன் மூலம் LAC பகுதியில் பதற்றங்கள் அதிகரித்த காரணத்தால் இந்த தடை அமல்படுத்தப்பட்டது.

டிக்டாக் இணையதளம் சில பயனர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது என்று X தளத்தில் சிலர் தெரிவித்துள்ளனர், இது டிக்டாக் ஒரு படிப்படியான திரும்ப இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது என கருத்து நிலவிய நிலையில் மத்திய அரசு தொடர்ந்து தடை நீடிக்கும் என தெளிவுப்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலவரத்தின் படி இணையதளத்தின் முதல் பக்கம் மட்டுமே பார்க்கும்படி உள்ளது, இதன் வீடியோ பக்கங்களை யாராலும் அணுக முடியாத நிலையில் உள்ளது. இதனால், டிக்டாக் இந்தியாவில் இயங்கவில்லை என்பது தெளிவாகிறது.
மேலும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிக்டாக் செயலி இன்னும் கிடைக்கவில்லை.டிக்டாக் இணையத்தளத்தில் பொதுவாக தகவல் மட்டுமே உள்ளது.
More From GoodReturns

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

தொடர்ந்து 2ஆவது நாளாக விலை சரிந்த தங்கம்..!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டது எப்படி? வெளிச்சத்துக்கு வந்த அமெரிக்க- இஸ்ரேல் கூட்டு சதி!!



Click it and Unblock the Notifications