டெல்லி: சீனாவை சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்திற்குசொந்தமான டிக்டாக் (tiktok ) செயலி இந்தியாவில் பல லட்சம் பயனர்களைக் கொண்ட ஒரு செயலியாகஇருந்து வந்தது. ஷார்ட் வீடியோக்கள் அடிப்படையிலான டிக் டாக் செயலியை இளம் தலைமுறையினர்பெருமளவில் பயன்படுத்தி வந்தனர் . இந்த சூழலில் தான் மத்திய அரசு 2020ஆம் ஆண்டு டிக்டாக் செயலியை தடை செய்தது.
அண்மைக்காலமாக டிக் டாக் செயலி மீண்டும் இந்தியாவில்பயன்பாட்டிற்கு வரப் போகிறது என்ற தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் டிக் டாக் உரிமையாளரானபைட் டான்ஸ் நிறுவனம் தங்களுடைய குருகிராம் அலுவலகத்தில் ஊழியர்களை வேலைக்கு தேர்வுசெய்வதாக விளம்பரம் வெளியிட்டு இருக்கிறது. டிக் டாக் நிறுவனத்தின் தாய் நிறுவனமானபைட் டான்ஸ் தங்களுடைய லிங்குடின் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில் குருகிராமில்இருக்கும் தங்களுடைய அலுவலகத்தில் கன்டென்ட் மாடரேட்டர் மற்றும் ஆபரேஷன்ஸ் லீட் ஆகியபதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது .

டிக் டாக் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமும்பகுதி அளவு அணுகக்கூடிய வகையில் மாறி இருக்கிறது. இதனால் இந்தியாவில் மீண்டும் டிக்டாக் செயலி பயன்பாட்டிற்கு வருகிறதா என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. சீனாவுக்கு சொந்தமான tiktokசெயலிக்கு இந்தியாவில் பெருமளவிலான ரசிகர்கள் இருந்தனர். 2020 ஆம் ஆண்டு மத்திய அரசுஇதனை தடை செய்யும்போது கிட்டத்தட்ட 200 மில்லியன் இந்தியர்கள் டிக் டாக் செயலியை பயன்படுத்திவந்தனர் .
தற்போது இன்ஸ்டாகிராமின் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ்,மோஜ் உள்ளிட்ட செயலிகள் இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன . இருந்தாலும்டிக் டாக் செயலி மீண்டும் இந்திய சந்தைக்குள் வந்தால் இந்த செயலிகள் அனைத்தையும் காலிசெய்து விடும் என சொல்லப்படுகிறது. தற்போது இந்தியா சீனா இடையிலான உறவு மீண்டும் மேம்பட்டுவருகிறது. பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.எனவே இவை அனைத்துமே டிக் டாக் மீண்டும் இந்தியாவில்பயன்பாட்டுக்கு வருவதற்கான ஒரு சாதகமான சூழலையே ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இதுவரை மத்திய அரசு டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்டதடையில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. தொடர்ந்து அது தடை செய்யப்பட்ட செயலியாகதான் இருந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி டிக்டாக் இணையதளம் இந்திய பயனாளர்கள்சிலருக்கு அணுக முடிந்ததாக தகவல் பரவி சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாகமாறியது.
2020ஆம் ஆண்டு கால்வன் பகுதியில் இந்தியா சீனா வீரர்களுக்குஇடையே ஏற்பட்ட மோதலை அடுத்து மத்திய அரசு தேச பாதுகாப்பு மற்றும் தரவு தனியுரிமை ஆகியவற்றைகுறிப்பிட்டு டிக்டாக் உள்ளிட்ட 58 சீன நாட்டு செயலிகளுக்கு தடை விதித்தது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications