அமெரிக்க நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து டிக்டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டு, இந்தியாவில் முடங்கியது போல் மொத்தமாக முடங்கியுள்ளது. இந்த நிலையில் டிக்டாக் செயலிக்கு 90 நாள் கெடு கொடுக்க உள்ளதாக டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கூறியுள்ளது.
ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்க உள்ள டொனால்டு டிரம்ப் பிரபல பத்திரிக்கையாளரான கிரிஸ்டென் வெல்கர் உடன் சனிக்கிழமை நடந்த ஒரு தொலைப்பேசி நேர்காணலில், டிரம்ப் திங்கட்கிழமை பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ள டிக்டாக் செயலிக்கு 90 நாட்கள் கால அவகாசம் கொடுக்கும் உத்தரவை வெளியிட்ட உள்ளதாகத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக எந்த ஒரு நாட்டிலும் புதிதாக ஒருவர் அதிபர் பதவியை ஏற்கும் போது முதல் 100 நாட்களில் என்ன செய்யப்போகிறார் என்பதை அனைத்து தரப்பினரும் கூர்ந்து கவனிக்கப்படுவது வழக்கம், ஆனால் டிரம்ப் முதல் நாளில் என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
ஏற்கனவே சீனா, கனடா உள்ளிட்ட நாடுகள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்பட இருப்பதாக டிரம்ப் கூறியிருக்கும் வேளையில், சீனாவுக்கு எதிரான நிலைப்பாடு, இஸ்ரேல் உடனான நட்பு, தைவான் நாட்டிற்கான ஆதரவு, அமெரிக்க அரசின் செலவுகளைக் குறைத்தல், தற்போது டிக்டாக் செயலிக்கான 90 நாட்கள் காலக்கெடு எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
இதேவேளையில் டொனால்டு டிரம்ப் இதில் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றாலும், டிக்டாக் சீனாவை தளமாகக் கொண்ட தாய் நிறுவனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலக்கெடுவை 90 நாட்கள் நீட்டிக்கப் பரிசீலித்து வருவதாகக் கூறினார். இதேவேளையில் டிக்டாக் தனது சேவையை முடக்கிய பின்னர் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் டிரம்ப் குறித்தும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டிக்டாக் வெளியிட்ட செய்தியில் "துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவில் TikTokஐ தடைசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது, அதாவது நீங்கள் இப்போது TikTok ஐப் பயன்படுத்த முடியாது. டொனால்டு டிரம்ப் அதிபராகப் பதவியேற்றவுடன் டிக்டாக்-ஐ மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான தீர்வை கொண்டு வர பணியாற்றுவோம். தயவுசெய்து காத்திருங்கள்" என்று டிக்டாக் செயலியில் இந்த செய்தியை கூறுகிறது.
டிரம்ப் தொலைப்பேசி பேட்டியில் "தற்போதைய நிலையில் 90 நாள் நீட்டிப்பு என்பது பெரும்பாலும் செய்யப்படக்கூடிய ஒன்று, ஏனெனில் அதுதான் பொருத்தமானதாக இருக்கும். இந்த விஷயத்தை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். இது ஒரு மிகப் பெரிய சூழ்நிலை," என்று கூறினார். மேலும் "நான் 90 நாட்கள் காலக்கெடு கொடுக்க செய்ய முடிவு செய்தால், திங்கட்கிழமை அதை அறிவிப்பேன்," என்று அவர் கூறினார்.
ஏற்கனவே டிக்டாக்-ன் அமெரிக்கச் செயல்பாடுகளைச் சரி பாதி எலான் மஸ்க்-ன் டிவிட்டர் நிறுவனத்திற்குக் கொடுப்பதாகக் கூறப்பட்ட நிலையில், இதை டிக்டாக் செய்தி தொடர்பாளர் மொத்தமாக மறுத்தார். இதேவேளையில் 90 நாட்கள் காலக்கெடு கொடுக்கப்பட்டால் டிக்டாக் கட்டாயம் அமெரிக்க கூட்டாளர் ஒருவரைத் தேட வேண்டியது அவசியமாகும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications