இந்திய பொழுதுபோக்கு சந்தையில் பெரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய சீன ஷாட் வீடியோ செயலியான டிக்டாக், இந்திய சந்தையில் இருந்த அனைத்து ஊழியர்களையும் பணிநீக்கம் செய்துள்ளது.
மத்திய அரசு இந்திய மக்கள் தனிநபர் பாதுகாப்பு காரணமாக இரண்டு வருடத்திற்கு முன்பு சீன செயலிகளை தடை செய்து இந்திய ப்ளே ஸ்டோரில் இருந்து மொத்தமாக நீக்கியது. இதில் டிக்டாக் உட்பட பல முன்னணி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் டிக்டாக் நிறுவனம் இந்திய சந்தையில் ஷாட் வீடியோ தாண்டி மியூசிக் சேவை மற்றும் இதர பல சேவைகளையும், வர்த்தகத்தையும் வைத்திருந்தது. இதற்காக இந்தியாவில் ஒரு அலுவலகத்தையும் சில ஊழியர்களையும் வைத்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
TikTok நிறுவனம்
சீனாவின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருக்கும் ByteDance-க்கு சொந்தமான ஷாட் வீடியோ செயலியான TikTok இந்த வார தொடக்கத்தில் இந்திய பணியாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊழியர்கள் பணிநீக்கம்
இந்தியாவில் டிக்டாக் செயலி கொடிக்கட்டி பறந்து வந்த நிலையில் பல ஆயிரம் ஊழியர்களை இந்தியாவில் பல அலுவலகங்களில் நியமித்து பெரும் வர்த்தக சந்தையை உருவாக்கி வந்தது. இதன் தொடர்ச்சியாக டிக்டாக் தடை செய்யப்பட்டு நிலையில் கிட்டத்தட்ட 6 மாதத்திற்கு பின்பு ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டது.
இந்திய வர்த்தகம் மூடல்
இந்த நிலையில் கடந்த 2 வருடமாக இந்தியாவில் டிக்டாக் திரும்ப வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும், மியூசிக் மற்றும் பிற நாடுகளுக்கு சேவைகளை அளித்து வந்த நிலையில் தற்போது மொத்தமாக இந்திய வர்த்தகத்தை மூடிவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது பையிட்டான்ஸ் நிர்வாகம்.
40 ஊழியர்கள்
இந்திய டிக்டாக் அலுவலகத்தில் இதுநாள் வரையில் பணியாற்றி வந்த 40 ஊழியர்களுக்கும் திங்கள்கிழமை அழைத்து அனைவருக்கும் பிங்க் ஸ்லிப் வழங்கப்பட்டு உள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் 3 - 9 மாதங்கள் வரையிலான பணிநீக்க ஊதியம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி 28 கடைசி நாள்
இந்த நிலையில் டிக்டாக் இந்திய ஊழியர்களுக்கு பிப்ரவரி 28 கடைசி நாள் என்று கூறப்பட்டது. மேலும் சீன செயலிகள் குறித்து அரசின் நிலைப்பாட்டின் காரணமாக இந்தியாவில் அதன் செயல்பாடுகள் மீண்டும் தொடங்குவது சாத்தியம் இல்லாத நிலையில் 40 ஊழியர்களையும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
வேறு வேலை வாய்ப்புகள்
இதை தொடர்ந்து டிக்டாக் நிர்வாகம் 40 ஊழியர்களையும் வேறு வேலை வாய்ப்புகளைத் தேட அறிவுறுத்தப்பட்டு உள்ளனர் என்று தெரிகிறது. இந்தியாவில் பல முன்னணி பொழுதுபோக்கு செயலிகள் அடுத்தடுத்து பணிநீக்கம் செய்யப்பட்டு வரும் வேளையில் டிக்டாக்-ன் 40 ஊழியர்கள் பணிநீக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் டிக்டாக்-ன் இந்திய சேப்டர் இதோடு முடிந்துள்ளது.
தேசிய பாதுகாப்பு
ஜூன் 2020 முதல் தேசிய பாதுகாப்பு காரணமாக டிக்டாக் மற்றும் கிட்டத்தட்ட 300 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்த பின்னர், சீன செயலிகளின் இந்திய அலுவலகத்தில் இருந்த தொழிலாளர்கள் பெரும்பாலானோர் துபாய் மற்றும் பிரேசில் சந்தைகளில் வேலை செய்தனர்.
டிக்டாக் தடை
இந்தியாவில் டிக்டாக் தடை செய்யும் போது சுமார் 200 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டு, அதன் மிகப்பெரிய வெளிநாட்டு வர்த்தக சந்தையாக இருந்தது. டிக்டாக் தடை செய்யப்பட்ட பின்பு இந்தியாவில் சிறிதும், பெரிதுமாக பல ஷாட் வீடியோ செயலிகள் உருவாகி என்று வெற்றியின் சுவையை ரசித்து வருகிறது.
ரீல்ஸ் மற்றும் ஷாட்ஸ்
ஆனால் சமீப காலமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் யூடியூப் ஷாட்ஸ் ஆகியவை பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் இந்திய ஷாட் செயலிகள் சில தடுமாற்றத்தையும் சந்தித்து வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications