இந்திய சமுக வலைத்தளத்தை வந்த சில நாட்களிலேயே ஆட்டிப்படைத்த சீனாவின் பைட் டான்ஸ்-க்கு சொந்தமாக டிக்டாக், ஹலோ போன்ற செயலிகள் மற்றும் வீடியோ எடிட்டிங் செயலியான CAPCUT ஆகியவை முக்கிய தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசால் தடை செய்யப்பட்டது. ஆனால் மீண்டும் இந்தியாவுக்குள் எப்படியாவது வர வேண்டும் என தொடர்ந்து முயற்சி செய்து தோல்வி அடைந்தது.
2020 ஆம் ஆண்டில் டிக்டாக் மீது தடை விதிக்கப்பட்ட நிலையில் தொடர் முயற்சிகள் தோல்வி அடைந்த காரணத்திற்காக 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் டிக்டாக் இந்திய அலுவலகம் முழுமையாக மூடப்பட்டது. இந்தியா மிகவும் முக்கியமான சந்தை என்பதால் இந்தியாவை விட்டு வெளியேற மனமில்லாமல் இன்னும் இரண்டு செயலிகளை இந்தியாவில் இயங்கி வருகிறது.

சீனாவின் பைட் டான்ஸ்-க்கு சொந்தமான மியூசிக் ஸ்ட்ரீமிங் செயலியான ரெஸ்ஸோ (Resso) மற்றும் ஆல் இன் ஒன் ப்ரொடெக்டிவிட்டி செயலியான LARK ஆகியவை இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த செயலிகள் மீது எவ்விதமான பிரச்சனையும் இல்லாத காரணத்தால் மத்திய அரசு தடை எதுவும் விதிக்கவில்லை.
Resso தற்போது இந்தியாவில் மட்டும் அல்லாமல் பிரேசில், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இயங்கினாலும், இந்தியா தான் மிகப்பெரிய சந்தையாக விளங்குகிறது. Resso செயலி இந்தியாவில் சுமார் 125 மில்லியன் முறை டவுன்லோடு செய்யப்பட்டு உள்ளதாக ஆப்மேஜிக் தெரிவித்துள்ளது.
இந்திய சந்தையில் வர்த்தகம் செய்யவும், சேவை அளிக்கவும் பைட்டான்ஸ் மற்றும் பிற சீன நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது. ஆனால் சீன செயலிகளும், சேவைகளும் இந்தியாவில் மட்டும் அல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பாவில் அதிகப்படியான தடைகளையும் நெருக்கடிகளையும் விதித்து வருகிறது.

உலகிலேயே சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் தான் மிகப்பெரிய இண்டர்நெட் சந்தை உள்ளது, இந்தியாவில் மட்டுமே தற்போது 730 மில்லியன் இண்டர்நெட் வாடிக்கையாளர்களை கொண்டு உள்ளது. இதனாலேயே இந்திய சந்தையை எந்த காரணத்திற்காகவும், எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க கூடாது என்ற இலக்குடன் பைட் டான்ஸ் உள்ளது.
பைட் டான்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தில் அனைத்து சேவைகளையும் சேர்த்து கணக்கிட்டால் வெறும் 5 சதவீதம் மட்டுமே Resso, LARK கொண்டு உள்ளது. ஒரு நிறுவனமாக பார்க்கும் போது TikTok மற்றும் Douyin மட்டுமே நம்பியிருக்க கூடாது Resso, LARK போன்ற பிற சேவைகளும் அவசியம். இதேவேளையில் இந்தியாவும் வேண்டும் என்பதால் Resso, LARK தொடர்ந்து சரியான முறையில் இயக்க ஒரு சிறிய அளவிலான அணியை இந்தியாவில் வைத்து இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications