கொரோனா பாதிப்பால் பல வர்த்தகங்கள் முடங்கி, ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வரும் நிலையில், கொரோனா-வின் பிறப்பிடமான சீனாவை தலைமையிடமாகக் கொண்டு உலக முழுவதும் செயல்பட்டு வரும் பொழுதுபோக்கு நிறுவனமான டிக்டாக்-இன் தாய் நிறுவனம் நிறுவனம் பையிட் டான்ஸ், கொரோனா பாதிப்புகள் நிறைந்த காலத்தில் 17 பில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்று 3 பில்லியன் டாலர் லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
பையிட் டான்ஸ் நிறுவனத்தின் கீழ் டிக்டாக், Helo, xigua video, vigo video, Lark (ஜப்பான் மற்றும் சிங்கப்பூர்), babe (இந்தோனேசியா), Toutiao (சீனா) ஆகிய நிறுவனங்கள் உள்ளது.
பையிட் டான்ஸ் நிறுவனம் கடந்த சில வருடத்தில் டிக்டாக் மற்றும் Helo ஆகிய இரு நிறுவனங்களை இந்தியா உட்படப் பல ஆசிய நிறுவனங்களில் அறிமுகம் செய்து மக்கள் ஈர்த்து வருகிறது.
இரட்டிப்பு வளர்ச்சி
பையிட் டான்ஸ் தற்போது பொழுதுபோக்குத் தளமாக மட்டும் அல்லாமல் உலகின் முன்னணி விளம்பர தளமாகவும் மாறி வருகிறது. இதன் எதிரொலியாக 2018இல் பையிட் டான்ஸ் தனது சர்வதேச வர்த்தகத்தில் இருந்து வெறும் 7.4 பில்லியன் டாலர் வர்த்தகத்தை மட்டுமே பெற்றது.
ஆனால் உலக மக்கள் இந்நிறுவன சேவைகளுக்குக் கொடுக்க ஏகபோக வரவேற்பின் காரணமாக 2019ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு அதிகமாக அதாவது 17 பில்லியன் டாலர் வருமானத்தைப் பெற்றுள்ளது.
வர்த்தகம்
இக்காலகட்டத்தில் பையிட் டான்ஸ் அதிகளவிலான விளம்பரத்தை டென்சென்ட் மற்றும் பைய்டூ ஆகிய நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
பையிட் டான்ஸ்-இன் வளர்ச்சி மூலம் பல முன்னணி விளம்பர சேவை அளிக்கும் நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டியாக உள்ளது.
இந்திய
பையிட் டான்ஸ் இந்தியாவில் டிக்டாக், helo, vigo video ஆகிய சேவைகளை அளித்து வரும் நிலையில், இந்நிறுவனம் தனது விளம்பர சேவையை முழுமையாக இந்தியாவில் விரிவாக்கம் செய்தால் இந்தியாவில் முன்னணி டிஜிட்டல் விளம்பர தளமாக இருக்கும் பேஸ்புக், கூகிள் ஆகியவை கடுமையான பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதிப்பு
இன்றைய மதிப்பில் பையிட் டான்ஸ் கிட்டதட்ட 150 முதல் 180 பில்லியன் டாலர் இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. மேலும் இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட 150 கோடி வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications