அமெரிக்காவில் டிக்டாக் செயலி-க்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு பல அதிரடிகளுடன் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்தது. சீனா-வின் பைட்டான்ஸ் தலைமையில் இயங்கும் டிக்டாக் நிர்வாகம் அமெரிக்காவில் தொடர்ந்து இயங்குவதற்கு போராடி வந்தாலும், அமெரிக்க அரசு கெடு விதித்த ஜனவரி 19 ஆம் தேதி வரையில் அமெரிக்கக் கூட்டாளியைப் பெற விரும்பாத நிலையில் முடங்கியுள்ளது.
அமெரிக்காவில் தடை விதிக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, டிக்டாக் செயலி முடக்கப்பட்டது. அமெரிக்காவில் கிட்டத்தட்ட பாதி மக்கள் தொகையை தனது வாடிக்கையாளராகக் கொண்டிருக்கும் டிக்டாக் தற்போது முடங்கியுள்ளது. டிக்டாக் அமெரிக்காவில் வெறும் பொழுதுபோக்கு தளமாக மட்டும் அல்லாமல் விளம்பர வருவாய் ஈட்டும் முக்கிய தளமாக உள்ளது.

அமெரிக்க நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து வாடிக்கையாளருக்கு ஒரு குறுஞ்செய்தி உடன் இந்த ஆப் முடங்கியது. இதனால் பல கோடி அமெரிக்கர்கள் டிக்டாக் செயலியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பில் இனி டிக்டாக் அமெரிக்க மண்ணில் செயல்பட கூடாது என அறிவிக்கப்பட்ட நிலையில் டிக்டாக் நிர்வாகமே இச்செயலியை முடக்கியது. இதை தொடர்ந்து டிக்டாக் செயலியில் இத்தளம் "தற்காலிகமாக" கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவில் TikTokஐ தடைசெய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது, அதாவது நீங்கள் இப்போது TikTok ஐப் பயன்படுத்த முடியாது. டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்றவுடன் டிக்டாக்-ஐ மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான தீர்வை கொண்டு வர பணியாற்றுவோம். தயவுசெய்து காத்திருங்கள்" என்று டிக்டாக் செயலியில் இந்த செய்தியை கூறுகிறது.
இதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் டிக்டாக் தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளது. அமெரிக்காவில் டிக்டாக் செயலி ஆப்ஸ்டோரில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க மக்கள் இந்த செயலியை இனி பதிவிறக்கம் செய்ய முடியாது.
ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்திடம் இருந்து டிக்டாக் அமெரிக்க செயல்பாடுகளை விற்பனை செய்ய அல்லது அமெரிக்காவில் முழுமையாக தடை செய்யப்படும் என்று ஒரு உத்தரவுக்கு கையெழுத்திட்டார். இதை எதிர்த்து வழக்கு தொடுத்தது பைட்டான்ஸ் சட்ட போராட்டத்தில் தோல்வி அடைந்தது.
இந்த தடை டிக்டாக் மற்றும் அதன் பயனர்கள் இருவருக்கும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவில் சமூக ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார பேச்சுவார்த்தையில் டிக்டாக் தாக்கம் மறுக்க முடியாதது. அமெரிக்காவில் டிக்டாக்-ன் அடுத்த கட்டம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், சமூக ஊடகங்களின் வளர்ச்சியிலும் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான நிலவும் புவியியல் அரசியல் பதட்டங்களிலும் இந்த தடை முக்கியமான நிகழ்வாகும்.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications