இந்திய டெலிகாம் துறையில் தொடர்ந்து ஆபத்துக்கட்டத்திலேயே இருக்கும் Vodafone Idea புதிய லைப்லைன்-ஐ பெறவுள்ளது. இந்தியாவில் ஜியோவின் போட்டியையும், ஆதிக்கத்தையும் சமாளிக்க முடியாமல் ஒரு பக்கம் தவித்து வந்த வோடபோன் ஐடியாவுக்கு ஸ்பெக்ட்ரத்திற்கான நிலுவை கட்டணம் பெரும் சுமையாக மாறியது. இதனால் இந்நிறுவனம் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு மத்திய அரசு தலையீட்டு நிலுவை தொகைக்கு பிணையாக இந்நிறுவன பங்குகளை கைப்பற்றியது மூலம் இயங்கி வருகிறது.
ஆனாலும் சந்தையில் முழுமையாக போட்டிப்போட முடியாமலும், போதுமான நிதி ஆதாரம் இல்லாமலும் உள்ளது. இந்த நிலையில் வோடபோன் ஐடியா நிர்வாகம் பல முறை தனது தாய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் போதுமான நிதி ஆதாரம் இல்லாமல் உள்ளது. வோடபோன் ஐடியா முதலீட்டாளர்களின் கண்ணீரை துடைக்க ஒரு அமெரிக்க நிறுவனம் முன் வந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த Tillman Global Holdings (TGH) என்ற தனியார் பங்கு முதலீட்டு நிறுவனம், வோடபோன் ஐடியா-வில் 52000 கோடி ரூபாய் வரையிலான தொகையை முதலீடு செய்ய தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டு திட்டம் நிறைவேறினால், டில்மேன் குளோபல் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்றும்.
வோடபோன் ஐடியா-வின் தற்போதைய நிதி நெருக்கடியும், இழப்புகளையும் கருத்தில் கொண்டு, இந்திய டெலிகாம் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன் டில்மேன் குளோபல் வந்துள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
டில்மேன் குளோபல்-ன் முதலீட்டை பெற வேண்டும் என்றால் முதலில் மத்திய அரசின் அனுமதி தேவை. காரணம் இந்திய அரசு வோடபோனில் சுமார் 49 சதவீத பங்குகளை கொண்டு பெரும் முதலீட்டாளராக உள்ளது.
டில்மேன் குளோபல் வோடபோன் ஐடியாவின் திட்டமிட்டபடி 6 பில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்தால் தற்போது அதன் தாய் நிறுவனமும், ஆஸ்தான பங்குதாரர்களான ஆதித்யா பிர்லா குழுமும், பிரிட்டன் நாட்டின் வோடபோன்-யிடம் இருந்து தனது கட்டுப்பாட்டை பெறும்.
இந்திய அரசு 49 சதவீத பங்குகளில் பெரும் பகுதி பங்கை விற்பனை செய்துவிட்டு, சிறிய அளவிலான பங்குகளை தொடர்ந்து வைத்துக்கொண்டு சிறிய பங்குதாரராக இருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஆனால் டில்மேன் குளோபல் இந்த முதலீட்டை செய்ய வேண்டுமாயின் மத்திய அரசு வோடபோன் ஐடியாவின் நிதி கடன்கள், AGR (அட்ஜஸ்டெட் கிராஸ் ரெவின்யூ), ஸ்பெக்ட்ரம் செலவுகள் உள்ளிட்ட அனைத்து நிதி பொறுப்புகளையும் மறுசீரமைப்பு செய்ய ஒப்புதல் அளித்தால் மட்டுமே செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளையில் டில்மேன் குளோபல் கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுக்கவில்லை, மாறாக நிதி சுமைகளை மறுசீரமைப்பு செய்யது போதுமான கால அவகாசம் மற்றும் கடனை திருப்பி செலுத்துவதில் சலுகைகளை அளிக்க கேரிக்கை விடுத்துள்ளது.
இந்த முதலீடு வோடபோன் ஐடியாவின் நிதி நிலையை மேம்படுத்தி, தொலைதொடர்பு துறையில் சரிவர ஜியோ மற்றும் ஏர்டெல் உடன் போட்டிப்போட முடியும். TGH-ன் முதலீடு, வோடபோனின் 5G விரிவாக்கம், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவும்.
இந்த அறிவிப்பு மூலம் பங்குச்சந்கையில் 10 சதவீதம் வரையில் உயர்ந்தது வோடபோன் ஐடியா பங்குகள். இன்று காலை வர்த்தகத்தில் 8.73 ரூபாய் விலையுடன் வர்த்தகத்தை துவங்கிய Vi பங்குகள் அதிகபட்சமாக 9.97 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் 52 வார உயர்வின் அளவு 10.57 ரூபாயாக உள்ளது. இன்றைய அதிரடியான வர்த்தகம் மூலம் வோடபோன் ஐடியாவின் சந்தை மதிப்பு 1 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை தாண்டியுள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications