இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்கும் வேகத்திற்கு இணையாக ஆப்பிள் நிறுவவனம் தனது ரீடைல் விற்பனை தளத்தையும் விரிவாக்கம் செய்ய உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ரீடைல் ஸ்டோரை மும்பையில் திறந்த அடுத்த 48 மணிநேரத்தில டெல்லியில் 2வது கடையை திறந்து வைத்துள்ளார் ஆப்பிள் சிஇஓ டிம் குக். மும்பை ஸ்டோருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பை விடவும் டெல்லிக்கு அதிகப்படியாக இருந்தது. மக்கள் முதல் நாளில் ஆப்பிள் ஸ்டோர்-க்குள் செல்ல ஆர்வம் காட்டி வரிசை கட்டி நின்றனர்.
ஆண்ட்ராய்டு போன்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் நிறுவனம் மிகவும் சிறிய பங்கை மட்டுமே கொண்டுள்ளது. சொல்லப்போனால் மொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் வெறு 3 சதவீதம் மட்டுமே ஆப்பிள் கொண்டு உள்ளது. இதை 10 -15 சதவீதமாக உயர்த்தவே சகல வசதிகள் கொண்ட 2 புதிய ஆப்பிள் ஸ்டோர்களை திறந்துள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் பிரத்மர் மோடியை நேற்று சந்தித்து பேசிய டிம் குக் உற்பத்தி, வேலைவாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினார். இதை தொடர்ந்து இன்று காலை டெல்லியில் முக்கிய இடத்தில் 2வது அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோரை திறந்து வைத்துள்ளார் டிம் குக். மக்கள் கொடுத்த வரவேற்பை பாருங்க.
ஆப்பிள் பிகேசி மும்பையின் ஜியோ வேர்ல்ட் டிரைவ் மால், பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸில் அமைந்துள்ளது, அதே சமயம் ஆப்பிள் சாகெட் புது டெல்லியின் செலக்ட் சிட்டி வாக் மாலில் அமைந்துள்ளது.
ஆப்பிள் சாகெட் ஸ்டோர் மும்பை ஸ்டோரை ஒப்பிடுகையில் பாதியாக மட்டுமே உள்ளது. தற்போது கிடைத்துள்ள தரவுகள் படி Apple இன் Saket ஸ்டோர் 8,417.83 சதுர அடி இடத்தில் அமைந்துள்ளது. ஆப்பிளின் மும்பையில் உள்ள BKC ஸ்டோர் சுமார் 20,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.
வியப்பு அளிக்கும் வகையில் இரண்டாவதாக திறக்கப்பட்டு உள்ளது டெல்லி ஸ்டோர் மிகவும் குறைவான இடத்தில் அமைந்துள்ளது. ஆனால் இரண்டு கடைகளுக்கும் ஒரே மாதிரியான வாடகையை ஆப்பிள் செலுத்துவதாக தெரிகிறது. ஆப்பிளின் சாகெட் ஸ்டோருக்கு மாதம் 40 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தும் அதே வேளையில், அதன் மும்பை அவுட்லெட்டுக்கு மாதம் ₹42 லட்சம் வாடகை செலுத்தும்.

ஆனால் மும்பை ஸ்டோரின் விற்பனையில் குறிப்பிட்ட தொகையை ரிலையன்ஸ் ஜியோ வேர்ல்ட் டிரைவ் மால்-க்கு செலுத்த வேண்டும். மேலும் Apple BKC ஆனது மும்பையின் புகழ்பெற்ற Kaali Peeli டாக்சிகளை மையமாக கொண்டு டிசைன் செய்யப்பட்டு உள்ளது.
Apple BKCக்கான வாடகை ஒப்பந்தத்தில், Google, Amazon, Facebook மற்றும் Microsoft உள்ளிட்ட 22 போட்டி பிராண்டுகள் ஸ்டோருக்கு அருகிலுள்ள இடங்களை ஆக்கிரமிப்பதையோ அல்லது விளம்பரங்களைக் காட்டுவதையோ தடுக்கும் ஒரு கண்டிஷன் வைத்துள்ளது. Apple Saket இதே போன்ற வாடகை விதிமுறைகளுக்கு உட்பட்டதா என்பது தெளிவாக இல்லை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications