Woodland-க்கு வேட்டு வைக்க அம்பானி கொண்டு வரும் Timberland.. 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் என்ட்ரி..!

மும்பை: அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற டிம்பர்லேண்ட் (Timberland) நிறுவனத்தின் காலணிகளை இனி இந்தியாவிலும் வாங்க முடியும்.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான அஜியோ (Ajio) தளத்தில் வாடிக்கையாளர்கள் டிம்பர்லேண்ட் பிராண்டின் காலணிகளை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நம்பர் ஒன் பிசினஸ்மேனாக இருக்கும் முகேஷ் அம்பானி பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வெற்றிகரமாக தொழில் நடத்தி வருகிறார். குறிப்பாக முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் தற்போது உள்நாட்டு போட்டியை சமாளிக்க பல வெளிநாட்டு நிறுவனங்களோடு கை கோர்த்துள்ளது.

Woodland-க்கு வேட்டு வைக்க அம்பானி கொண்டு வரும் Timberland.. 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் என்ட்ரி..!

மிந்த்ரா, மீஷோ உள்ளிட்ட நிறுவனங்களுடன் அஜியோ கடுமையான போட்டியை எதிர்கொண்டுள்ளது. எனவே பிரத்யேகமாக வெளிநாட்டு நிறுவனங்களின் பேஷன் பொருட்களை அஜியோ வாயிலாக விற்பனை செய்கிறது.

அந்த வகையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் அமெரிக்காவின் புகழ் பெற்ற டிம்பர் லேண்ட் நிறுவனத்தோடு ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி டிம்பர் லேண்ட் நிறுவனத்தின் காலணிகளை இந்தியர்கள் இனி அஜியோ தளத்தில் வாங்க முடியும்.

கடந்த மாதம் தான் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் ASOS, H&M ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களோடு கூட்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. தற்போது அமெரிக்காவின் டிம்பர்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவில் ஏற்கனவே டிம்பர் லேண்ட் பிராண்ட் தன்னுடைய சில்லறை விற்பனை கடைகளை அமைத்து காலணிகளை விற்பனை செய்து வந்தது.

ஆனால் உள்ளூர் சந்தையில் ஏற்பட்ட கடுமையான போட்டி மற்றும் வுட்லேண்ட் உள்ளிட்ட பிராண்டுகள் காரணமாக தங்களின் விற்பனை குறைந்ததால் டிம்பர்லேண்ட் நிறுவனம் 2015 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் இருந்த கடைகளை மூடிவிட்டு நாட்டை விட்டு வெளியேறியது.

குறிப்பாக டிம்பர்லேண்ட் நிறுவனத்தின் லோகோவை போலவே வுட்லாண்ட் நிறுவனத்தின் லோகோவும் இருந்தது மிகப்பெரிய பிரச்சனையையும் ஏற்படுத்தியது. இந்த சூழலில் தான் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் டிம்பர்லேண்ட் நிறுவனத்தோடு ஒப்பந்தம் மேற்கொண்டு அவர்களின் காலணிகளை விற்பனை செய்கிறது.

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் கட்டுக்குள் இருக்கிறது. இந்த நிறுவனத்தை பொருத்தவரை இ காமெர்ஸ் தளங்கள் மட்டும் இல்லாமல் தங்களின் சில்லறை விற்பனை கடைகளையும் அதிக்கப்படுத்தி வருகிறது.

அஜியோ, டிரெண்ட்ஸ், ஜியோமார்ட், ரிலையன்ஸ் ஃபிரஷ் ஆகியவை ரிலையன்ஸ் ரீடெய்லின் கட்டுக்குள் தான் வருகின்றன. அண்மையில் இந்நிறுவனம் புதிதாக 464 கடைகளை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் மொத்தமாக நாடு முழுவதும் 18,946 கடைகளை செயல்படுத்தி வருகிறது.

ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் ஃபேஷன் மட்டுமில்லாமல் உணவு பொருட்களையும் விற்பனை செய்ய தொடங்கிவிட்டது. Armani Café, Pret A Manger உள்ளிட்ட காபிக்கு பெயர் போன கடைகளை மும்பையில் நடத்தி வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+