இந்திய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 50% வரி விதித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இதை ஒரு வாய்ப்பாக மாற்ற வேண்டும் என்றும் இந்தியா அதிரடி உள்நாட்டு பொருளாதார structural சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தள பதிவில், "1991ஆம் ஆண்டு இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, அதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு நாட்டு வளர்ச்சிக்கான வழிகளை திறந்தது. இன்று அமெரிக்கா விதித்த வரி நெருக்கடியும் அதுபோலவே ஒரு புதிய திருப்புமுனையாக மாறக்கூடும். அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்வதைவிட, இந்தியா உள்நாட்டு சீர்திருத்தங்கள், தொழில்நுட்ப மேம்பாடு, உற்பத்தித் திறன் அதிகரிப்பு போன்ற துறைகளில் முனைப்புடன் செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் வரி நடவடிக்கையைச் சுட்டிக்காட்டியுள்ள ஆனந்த் மஹிந்திரா, தற்போதைய உலக வர்த்தக குழப்பங்களை ஒரு "நவீன மந்தன்" (பாரம்பரிய புராணக் கதைபோல) எனக் குறிப்பிட்டுள்ளார். சரியான முறையில் பதிலளிக்கப்படும் பட்சத்தில் இது "அமிர்தம்" போல வளர்ச்சி வாய்ப்பை இந்தியாவுக்கு தரக்கூடும் என நம்புகிறார்.
ஐரோப்பா பாதுகாப்பு செலவுகளை அதிகரித்து நிதி சார்ந்த நெகிழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டுக்குள் உள்ள வர்த்தகத் தடைகளை அகற்றி, பொருளாதாரத்தைக் கோட்பாடுகளால் கட்டுப்படுத்தாமல், மாறும் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளது. இந்தியாவும் இதேபோல் சீர்திருத்தங்களில் தீவிரமாக செயல்பட வேண்டும்.
அதாவது, தொழில் தொடங்க எளிதாக்கும் Single-window investment system உருவாக்கம், சுற்றுலாத் துறையை முக்கியமான வெளிநாட்டு நாணய வருமான மற்றும் வேலைவாய்ப்பு மூலமாக மாற்றுவது போன்ற சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
இந்த சூழ்நிலையை சவாலாகவே பார்க்காமல், வாய்ப்பாகவும், வளர்ச்சிக்கான திருப்பு முனையாகவும் இந்தியா பார்க்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தி, தொழில்முனைவோர் நடத்தை, சுற்றுலா வளர்ச்சி, வெளிநாட்டு முதலீட்டுக்கு வாய்ப்பு ஆகிய துறைகளில் அடிப்படை மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் தற்போது தங்கள் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக ஜெர்மனி, நீண்ட காலமாக கடைப்பிடித்து வந்த தொலைநோக்கு நிதிச்சுமை கட்டுப்பாட்டு விதிகளை சீர்திருத்தத் திட்டங்களில் மாற்றி அமைத்துள்ளது. இது, அந்த நாட்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவலாம்.
அதேபோல், கனடா தற்போது உள்நாட்டுப் பொருளாதார ஒருங்கிணைப்பைத் தடுக்கும் வர்த்தகத் தடைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம், நீண்ட கால வளர்ச்சிக்கு தேவையான உள்நாட்டு பொருளாதார ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதில் கனடா முன்னேறுவதாக ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா தற்போது எதிர்கொள்ளும் சர்வதேச வர்த்தக அழுத்தங்களை ஒரு நல்ல முடிவுக்கான ஆரம்ப கட்டமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, நம்முடைய சொந்த வளர்ச்சி பாதையை உருவாக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications