பெங்களூர், ஹைதராபாதில் இருந்து எல்லோரும் கோயம்புத்தூருக்கு வர வேண்டிய நேரம் வந்திடுச்சு..! ஐடி ஊழியர்களே உஷார்

ஐடி சேவை மற்றும் டெக் துறையில் இந்தியாவிலேயே வேகமாக வளரும் நகரமாகக் கோயம்புத்தூர் உருவெடுத்து வரும் வேளையில் உலகளாவிய முன்னணி கன்சல்டிங் நிறுவனமான EY ஒரு முக்கியமான ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளது. இதில் கோயம்புத்தூரில் தற்போது உள்ள 75 ஜிசிசி அலுவலகங்களின் எண்ணிக்கை, 2032ஆம் ஆண்டுக்குள் 200 ஆக உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Leapfrog 2032: The Road to 200 GCCs in Coimbatore என்ற தலைப்பில் EY மற்றும் CII அமைப்பு இணைந்து கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளின் திறன், வளர்ச்சி வாய்ப்புகள், உள்கட்டமைப்பு என அனைத்தையும் ஆய்வு செய்து இந்த அறிக்கையை ஆய்வு செய்துள்ளது.

பெங்களூர், ஹைதராபாதில் இருந்து எல்லோரும் கோயம்புத்தூருக்கு வர வேண்டிய நேரம் வந்திடுச்சு..! ஐடி ஊழியர்களே உஷார்

இந்திய டெக் துறையின் வளர்ச்சி என்பது இனி ஐடி சேவைத் துறையை நம்பியிருக்காது, ஜிசிசி நிறுவனங்களைச் சார்ந்து தான் இருக்கும் எனப் பல சந்தை கணிப்புகள் கூறி வரும் வேளையில் கோயம்புத்தூரில் ஜிசிசி எண்ணிக்கை 75 முதல் 200 ஆக உயரும் காரணத்தால் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை என வேலைக்காக நாடு முழுவதும் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் தங்களின் திறனுக்கு ஏற்ற வேலையை இனி கோயம்புத்தூரிலேயே பெறலாம். இதோடு ஐடி சேவைத் துறை நிறுவனங்களாக டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் போல் அல்லாமல் ஜிசிசி நிறுவனங்களில் அதிகப்படியான சம்பளம் கிடைத்து வருகிறது.

Also Read

கோயம்புத்தூரில் ஜிசிசி நிறுவனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகரிக்க முக்கியமான காரணம் இப்பகுதியில் இருக்கும் Engineering Talent, தொழில்துறை வலிமை, பணியாளர் நிலைத்தன்மை மற்றும் வளர்ந்து வரும் Innovation Ecosystem ஆகியவை GCC நிறுவனங்களை ஈர்க்கும் முக்கிய காரணிகளாக உள்ளது என் EY அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2026 நிலவரப்படி கோயம்புத்தூரின் மொத்த மக்கள் தொகை 38 லட்சம், இதில் எழுத்தறிவு கொண்ட மக்களின் விகிதம் 84% ஆகவும் உள்ளது. மேலும் மொத்த மக்கள் தொகையில் சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான டெக் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளனர்.

Recommended For You

மேலும் அடுத்த தலைமுறை ஊழியர்களை ஈர்க்கவும், தொடர்ந்து திறன் வாய்ந்த ஊழியர்களை உருவாக்கவும் கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார 137 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளது, இதில் இருந்து ஆண்டுதோறும் 30000க்கும் அதிகமான STEM பட்டதாரிகள் வருகின்றனர். இதன் மூலம் அடுத்த 6 ஆண்டுகளில் மிகவும் எளிதாகக் கோயம்புத்தூரில் சுமார் 125 புதிய GCCகளை ஈர்க்க முடியும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் கோயம்புத்தூரில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, கொழும்பு மற்றும் கோலாலம்பூர் போன்ற இடங்களுக்கு நேரடி சர்வதேச விமான இணைப்புகள் உள்ளன. ஆனால் டெக் துறைக்கு முக்கியமான பகுதியாக விளங்கும் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு இணைப்பு விமானச் சேவை உள்ளது எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் கோயம்புத்தூரின் இந்த அதிரடி வளர்ச்சியில் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது அலுவலக இடம், தற்போதைய நிலையில் வெறும் 8 - 10 மில்லியன் சதுர அடி அலுவலக இடம் மட்டுமே உள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+