அம்பானி குடும்பத்தில் டினா முனிம் பங்கு மிகவும் முக்கியமானது, முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானியின் மனைவி தான் டினா முனிம். மும்பையில் 1957 பிப்ரவரி 11 ஆம் தேதி டினா முனிம் பிறந்தார். பாலிவுட்டில் 1970இல் அடியெடுத்து வைத்தார்.
தேஷ் பர்தேஷ், பாதன் பாதன் மேய்ன், கரிஷ்மா ஆகிய பிரபல படங்களில் டினா முனிம் நடித்துள்ளார். 1978இல் வெளியான அவரது அறிமுகப்படமான தேஷ் பர்தேஷ் திரைப்படம் மெகா ஹிட்டானது. இதைத் தொடர்ந்து பாதன் பாதன் மெய்ன், கர்ஸ், யே வாடா ரஹா ஆகிய படங்களில் நடித்தார்.

1970களின் பிற்பகுதியில் பாலிவுட்டில் டினா முனிம் கோலோச்சினார். ராஜேஷ் கன்னாவுடன் ஜோடி சேர்ந்து சௌடென், பேவாஃபை, அலக் அலக் போன்ற படங்களில் நடித்தார். அவர்களுக்குள் நெருக்கமான உறவு இருப்பதாகக் கூறப்பட்டாலும் தாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்றே கூறி வந்தனர்.
1991இல் அனில் அம்பானியை டினா முனிம் திருமணம் செய்து கொண்டார். அதற்குப் பின்னர் டினா முனிம் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நடிப்பைக் கைவிட்ட பின்னர் டினா முனிம் பெரும்பாலும் அறப்பணிகளில் ஈடுபட்டார்.
மும்பையிலுள்ள கோகிலா பென் திருபாய் அம்பானி நினைவு மருத்துவமனையின் தலைவராக பணியாற்றி வருகிறார். இந்த மருத்துவமனை 2024 ஃஎப்இ ஹெல்த்கேர் விருதுகளை வென்றுள்ளது. அவரது தலைமையின் கீழ் இந்த மருத்துவமனை ஹெல்த்கேரில் பல வியத்தகு சாதனைகளை படைத்துள்ளது.
வசதிவாய்ப்பற்ற ஏழைக் குழந்தைகளுக்கு கல்வியறிவு அளிக்கும் பல்வேறு திட்டங்களையும் டினா முனிம் முயற்சியில் செயல்படுத்தப்பட்டன. பல லட்சக்கணக்கான குழந்தைகள் இந்த திட்டங்கள் மூலம் பயனடைந்துள்ளனர்.
டினா முனிம்மின் இந்தத் திட்டம் பலரது பாராட்டைப் பெற்றுத் தந்தது. டினா முனிமுக்கு கலை, கலாசாரம் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் உள்ளது. இதற்காக அவர் பல கலை கண்காட்சிகளை நடத்தியுள்ளார். பல அபூர்வ கலைப் பொக்கிஷங்களை வாங்கி வைத்துள்ளார். நுண்கலை மேம்பாட்டுக்கு உதவி செய்து வருகிறார்.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications