சென்னை: சொந்தமாக ஒரு வீடு வாங்கி செட்டிலாகி விட வேண்டும் என்பது தான் பலரது கனவு.ஆனால் தற்போது இந்தியாவில் வீடு வாங்குவது என்பது அத்தனை சுலப காரியமாக இருக்கிறதா? . நிச்சயம் இல்லை.
குறிப்பாக நகர் பகுதிகளில் ஒரு வீடு வாங்குவதோ அல்லது ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்க வேண்டும் என்றால் கூட குறைந்தபட்சம் ரூ.1 கோடி தேவைப்படுகிறது. இந்த சமயங்களில் உதவுபவை தான் வங்கிகள் நமக்கு வழங்கக்கூடிய வீட்டுக் கடன்கள்.

பெரும்பாலானவர்கள் வீட்டு கடன்களை வாங்கி தங்களது கனவினை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆனால் வீட்டுக் கடன் என்பது அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு நாம் மாதந்தோறும் வட்டியோடு சேர்த்து திரும்ப செலுத்தியாக வேண்டும். எனவே வீட்டுக் கடன் பெறும்போது கடனை திரும்ப செலுத்தும் கால அளவை எப்படி குறைக்கலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக தெரிந்து கொள்வோம்.
குறுகிய கடன் காலம்: வீட்டுக் கடன் எடுக்கும் போது அதற்கான காலத்தை இயன்ற வரை குறைந்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் குறுகிய கடன் காலத்தை தேர்வு செய்தால் அது உங்களது ஒட்டுமொத்த வட்டி செலவை குறைக்கும். இதன் மூலம் நீங்கள் வாங்கிய அசல் தொகையை பெரும்பான்மையாக செலுத்துவீர்கள்.
இது ஒரு வகையில் உங்களுக்கு லாபமானதாகவும் இருக்கும். ஆனால் குறுகிய கடன் காலமென்றால் உங்களது மாதாந்திர இஎம்ஐ அதிகமாக இருக்கும். அதையும் மனதில் வைத்து தான் இந்த முடிவினை எடுக்க வேண்டும்.
ஸ்டெப் அப் இஎம்ஐ: உங்களுடைய கடன் செலுத்தும் காலத்தை குறைக்க ஸ்டெப் அப் இஎம்ஐ திட்டத்தை தேர்வு செய்யலாம். உங்களது வருவாய் உயர்வதற்கு ஏற்ப இஎம்ஐ தொகையையும் நீங்கள் உயர்த்த வேண்டும். இதன் மூலம் நீங்கள் கடனை செலுத்தும் காலம் குறையும். வட்டியின் அளவும் குறையும் என்பது சிறப்பு.
வரிச் சலுகைகளை பயன்படுத்துங்கள்: இந்தியாவில் வீட்டுக் கடன்களை பொறுத்தவரை அசல் மற்றும் வட்டி தொகைகளுக்கு வரி சலுகைகள் கிடைக்கின்றன. எனவே இந்த நன்மைகளைப் புரிந்து கொண்டு வரிச் சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதாவது உங்களது வரிவிதிப்புக்கு உட்பட்ட வருமானத்தை குறைக்க வீட்டு கடனுக்கான விலக்குகளை பயன்படுத்துங்கள். இந்திய வருமான வரிச் சட்டம், வீட்டுக் கடனுக்காக செலுத்தக்கூடிய வட்டி தொகை மற்றும் அசல் தொகை ஆகியவற்றுக்கு சலுகைகளை வழங்குகிறது.
முன்கூட்டியே பணம் செலுத்துதல்: போனஸ் கிடைப்பது, வரி பிடித்தங்கள் திரும்ப கிடைப்பது என உங்களுக்கு கிடைக்கும் கூடுதல் நிதிகளை கொண்டு வீட்டு கடனை முன் கூட்டியே செலுத்துங்கள். இதனால் அசலும் வட்டியும் குறைந்து நீங்கள் கடன் செலுத்தும் கால அளவும் குறையும்.
கடன் மறுசீரமைப்பு: தற்போதைய வட்டி விகிதங்களை நீங்கள் எப்போதும் கண்காணிக்க வேண்டும். வட்டி விகிதங்கள் குறையும் போது உங்கள் வீட்டுக் கடனை நீங்கள் மீண்டும் ஒருமுறை கட்டமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களது வட்டி செலவுகள் குறையும் . ஆனால் இது போல நீங்கள் மறு கட்டமைப்பு செய்யும்போது கூடுதலாக ஆவணங்கள் மற்றும் செயலாக்க கட்டணங்களை செலுத்த வேண்டியது இருக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications