ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் பிரிபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கு கட்டண உயர்வை அறிவித்தன. தொலை தொடர்பு நிறுவனங்கள், தங்கள் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ள நிலையில், BSNL இன்னும் எந்த விதமான கட்டண உயர்வையும் அறிவிக்கவில்லை. இந்த நடவடிக்கையின் காரணமாக, பல வாடிக்கையாளர்கள் தங்களுடைய வோடபோன், ஜியோ மற்றும் ஏர்டெல் சிம் கார்டு நம்பரை BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு திட்டமிட்டு வருகின்றனர்.
ஜியோ, ஏர்டெல், வோடபோன் சிம் கார்டை BSNL க்கு மாற்றுவது எப்படி?: மெசேஜ் அப்ளிகேஷனைத் திறந்து "PORT (ஸ்பேஸ்) [உங்கள் 10 இலக்க மொபைல் எண்]" என டைப் செய்யவும். இந்த டெக்ஸ்ட்டை 1900-க்கு SMS அனுப்பவும். UPC (Unique Porting Code) கோட் வரும் வரை காத்திருக்கவும். நீங்கள் ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தால், SMS அனுப்புவதற்குப் பதிலாக 1900 என்ற எண்ணிற்கு கால் செய்ய வேண்டும்.

இந்த UPC கோட் 15 நாட்களுக்கு அல்லது உங்களுடைய நம்பர் BSNL ஆபரேட்டருக்கு மாற்றம் செய்யப்படும் வரை செல்லுபடியாகும். ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு பகுதிகளைத் தவிர்த்த பயனர்களுக்கு இது பொருந்தும் என்று BSNL தெரிவித்துள்ளது. மேலும், உங்கள் தற்போதைய தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன், உங்களுக்கு எந்த வித நிலுவையும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்கள் செல்லுபடியாகும் UPC ஐடியைப் பெற்றவுடன், அருகிலுள்ள BSNL வாடிக்கையாளர் சேவை மையம் (CSC), அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர் அல்லது சில்லறை விற்பனையாளரைப் பார்வையிடலாம். வாடிக்கையாளர் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, உங்கள் சிம் கார்டை மாற்றம் செய்ய கோரிக்கையைச் சமர்ப்பிக்கலாம்.
செயல்முறை முடிந்ததும், பழைய சிம் செயலிழக்கப்படும் மற்றும் புதிய BSNL சிம் கார்டைப் பெறுவீர்கள். குறிப்பிட்ட காலக்கெடுவில், BSNL-இன் சேவைகளைப் பயன்படுத்த உங்கள் சிம் கார்டை மாற்றலாம்.
கட்டண உயர்வு காரணமாக உங்கள் தற்போதைய தொலைத்தொடர்பு சேவையை மாற்ற திட்டமிட்டிருந்தால், BSNL ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். நெட்வொர்க் கவரேஜ் மற்றும் சேவையின் தரம் குறித்து ஆராய்ச்சி செய்து உங்களுக்கு ஏற்ற திட்டத்தை தேர்வு செய்யவும்.


Click it and Unblock the Notifications