திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் 4,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள டாடா குழுமத்துக்கு சொந்தமான சூரிய செல் உற்பத்தி ஆலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
TP Solar: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் டாடா குழுமம் உற்பத்தி ஆலைகளை நிறுவிவருகிறது. இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில், 4,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 350 ஏக்கர் பரப்பளவில் டாடா குழுமத்தின் சூரிய செல் உற்பத்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த ஆலை மூலம் 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள். இந்த ஆலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இது இந்தியாவிலேயே மிகப்பெரிய சூரிய சக்தி செல் ஆலை என சொல்லப்படுகிறது.
இதனை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலைக்கு சென்று நேரில் பார்வையிட்டார். ஆலை வளாகத்தை பார்வையிட்ட போது பணியில் இருந்த பெண் தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். பின்னர் ஆலை நிர்வாக அதிகாரிகள் பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன், நெல்லையில் தங்களுடைய மிகப்பெரிய சூரிய செல் உற்பத்தி ஆலை நிறுவுவதற்கு உதவியாக இருந்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் ஆலையை சுற்றி 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கக்கூடிய பெண்களுக்கெல்லாம் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்பட்டுள்ளது எனக் கூறியுள்ள அவர் தற்போதைக்கு இந்த ஆலை 4.3 கிகாவாட் சூரிய செல் உற்பத்தி ஆலையாக இருக்கிறது கூடிய விரைவில் இதன் திறன் 8 கிகாவாட்டாக உயர்த்தப்படும் என கூறினார்.
Vikram Solar: இந்த நிகழ்ச்சியை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், 2574 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள விக்ரம் சோலார் நிறுவன ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த புதிய ஆலையால், 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதிலும் 80 சதவீத பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மாற்றுதிறனாளிகள் 100 பேருக்கு வேலை கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே தமிழ்நாடு அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது எனவும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024 -25ஆம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை முதலீடுகளை ஈர்ப்பதில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என குறிப்பிடப்பட்டிருப்பதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள பொருளாதரமாக மாற்ற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு அமைந்ததிலிருந்து 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை ஈர்த்துள்ளதாகவும் இதன் மூலம் மாநிலத்தில் 31 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications