தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் அடுத்து உலுக்கி வரும் கனமழை மிகப்பெரிய பாடத்தை அனைவருக்கும் கற்றுக்கொடுத்துள்ளது. குறிப்பாக கஷ்டப்பட்டு சேமித்து வாங்கிய வாகனங்கள், வீடு ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதை பலருக்கும் உணர்த்தியுள்ளது. சென்னை மக்களை தொடர்ந்து தற்போது தென் மாவட்ட மக்களுக்கும் இந்த கனமழை மூலம் உணர்த்தியுள்ளது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பல இடங்களில் கடந்த 24 மணி நேரமாக பெய்து வருகிறது. முக்கியமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 93.2 மிமீ பதிவாகி அதிர்ச்சி கொடுத்துள்ளது. இத்தகைய கனமழை கடந்த 177 ஆண்டுகளில் பெய்த 2வது அதிகபட்ச மழை என்று கூறப்படுகிறது.

மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரும் செவ்வாய்க்கிழமை வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழை வெள்ளத்தில் இப்பகுதியில் இருக்கும் பெரும்பாலான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
நம்ம மக்கள் அரும்பாடுபட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமிப்பு, பிஎப் பணம், வீட்டில் பெண்கள் தாலி கொடி வரையில் விற்று கனவு வீட்டை கட்டினாலும் வீட்டை பாதுகாக்கும் இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இத்தகைய கனமழை மூலம் ஏற்படும் பாதிப்புகள் தான் ஹோம் இன்சூரன்ஸ் அவசியத்தை உணர்த்துகிறது.
இயற்கைப் பேரிடரின் போது மக்கள் தங்கள் குடும்பத்தினரையும், முக்கியமான பொருட்களை பாதுகாக்க முயற்சிகள் எடுக்கின்றனர். ஆனால் வாழ்க்கை முழுவதும் சேமித்த பணத்தை கொண்டு கட்டிய விட்டை அப்படியே விட்டுவிட்டு போக வேண்டிய நிலை உருவாகிறது.
இயற்கையின் சீற்றத்தின் போது நம்மைப் பாதுகாத்துக்கொள்வது போல் கஷ்டப்பட்டுச் சேமித்த பணத்தில் அல்லது கஷ்டப்பட்டு ஈஎம்ஐ-யில் வாங்கிய வீட்டை பாதுகாக்க ஒரே வழி ஹோம் இன்சூரன்ஸ். சென்னை மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு பின்பு பலர் ஹோம் இன்சூரன்ஸ்-ன் முக்கியதுவத்தை உணர்ந்துள்ளனர்.
ஹோம் இன்சூரன்ஸ் மூலம் வீட்டை பாதுகாப்பது மட்டும் அல்லாமல் வீட்டில் இருக்கும் உடைமைகளையும் பாதுகாக்க முடியும். இந்த ஹோம் இன்சூரன்ஸ் மூலம் இயற்கையின் சீற்றத்தின் மூலம் ஏற்படும் பாதிப்புகள், தீ விபத்து, கொள்ளை மற்றும் திருட்டு ஆகியவற்றுக்கான காப்பீடு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
வீட்டுக் காப்பீட்டுக் கொள்கை மூலம் ஒரே நேரத்தில் வீட்டையும், வீட்டில் இருக்கும் பொருட்களையும் பாதுகாக்க முடியும், பொதுவாக இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வீட்டு காப்பீடுகளும் வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருட்களுக்கும் சேர்த்து தான் இன்சூரன்ஸ் வழங்குகிறது. இத்தகைய வீட்டுக் காப்பீட்டை ஆன்லைனிலேயே வாங்கும் வசதிகள் உள்ளது.
மேலும் வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தின் ப்ரீமியம் தொகை வீட்டின் மதிப்பைப் பொருந்து மாறுபடும். கட்டிடத்தின் மதிப்பு, கட்டுமான இடம், கட்டுமானத்திற்கான செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்புக் கணக்கிடப்படும். இதேபோல் வீட்டில் இருக்கும் பொருட்கள் அடிப்படையிலும் ப்ரீமியம் தொகை மாறும்.
இந்திய இன்சூரன்ஸ் சந்தையில் இருக்கும் வீட்டு காப்பீட்டின் அடிப்படையில், 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய வீட்டில் 7 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் இருப்பின், 5 வருட காப்பீட்டு காலத்திற்கு வருடாந்திர ப்ரீமியம் 892 ரூபாயில் இருந்து 1300 ரூபாய் அளவில் உள்ளது.
இத்தகையை காப்பீடு புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு பெரிய அளவில் பயன்படும். எனவே ஒரு முறைக்கு, இரு முறை யோசித்து, விசாரித்து வாங்கிக்கொள்ளுங்கள்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications