திருநெல்வேலி மக்கள் மழை வெள்ளம் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் வேளையில் இப்பகுதி பொருளாதாரம், வர்த்தகம், மக்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவை அதிகரிக்கும் முக்கிய அறிவிப்பு வந்துள்ளது. திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் விக்ரம் சோலார் என்ற நிறுவனம் 200 ஏக்கரில் மாபெரும் சோலார் மாடியூல் தொழிற்சாலையை அமைக்கும் திட்டத்தை அறிவித்தது.
சுமார் 200 ஏக்கர் நிலத்தில் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் இந்தச் சோலார் செல் மற்றும் மாடியூல் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்தது விக்ரம் சோலார் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்தத் தொழிற்சாலை மூலம் டிப்லமோ, ஐடிஐ, கலை மற்றும் அறிவியல், இன்ஜினியரிங் பட்டதாரிகள் எனச் சுமாப் 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

விக்ரம் சோலார் நிறுவனத்தின் இந்த 3 ஜிகாவாட் தொழிற்சாலை வேகமெடுக்காமல் இருந்த நிலையில், இலங்கையில் அதானி குழுமத்திற்கு உறுதுணையாக இருந்த அமெரிக்க அரசு நிறுவனமான DFC எனப்படும் சர்வதேச வளர்ச்சி நிதியியல் அமைப்பு கங்கைகொண்டான்-ல் அமைக்கப்படும் விக்ரம் சோலார் திட்டத்திற்குச் சுமார் 200 மில்லியன் டாலர் அளவிலான நிதியுதவி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
துபாயில் நடந்த கூட்டத்தில் கங்கைகொண்டான் திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் விக்ரம் சோலார், DFC மத்தியில் கையெழுத்தானதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கிளீன் மற்றும் நிலையான எனர்ஜியை உருவாக்குவதில் விக்ரம் சோலார் உடன் DFC கூட்டணி சேர்ந்துள்ளது என விக்ரம் சோலார்-ன் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனரான கியானேஷ் சௌத்ரி இந்நிறுவன அறிக்கையில் தெரிவித்தார்.
திருநெல்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குக் கங்கைகொண்டான் சிப்காட் மிகவும் முக்கியமானது, சுமார் 2000 ஏக்கரில் அமைந்துள்ள இந்தத் தொழிற்பேட்டையில் கடந்த 2 வருடத்தில் 5000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டை திரட்டப்பட்டு உள்ளது.
கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் தற்போது சோலார் மாடியூல், பிஸ்கட், ஹைய் டெக் சென்சார் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வந்துள்ளது. இதில் டாடா பவர் சோலார், விக்ரம் சோலார், பிரிட்டானியா, BOSCH ஆகியவை வந்துள்ளது.
டாடா பவர் சோலார், விக்ரம் சோலார் ஆகியவை தலா 200 ஏக்கரில் சோலார் செல் மற்றும் மாடியூல் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைத்து வருகிறது. ஜெர்மனி நாட்டின் BOSCH 550 கோடி ரூபாய் முதலீட்டில் 80 ஏக்கரில் தொழிற்சாலை அமைத்துள்ளது.
தமிழ்நாடு அரசு கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் 1500 ஏக்கர் கூடுதலாக ஈர்க்கும் திட்டத்தில் கடந்த சில காலாண்டுகளாகப் பணியாற்றி வருகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications