ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் புகழ்பெற்றது. இந்த கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்தபோது திருப்பதி லட்டு பிரசாதத்துக்கான நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையிலும், போலே பாபா ஆர்கானிக் டெய்ரி பிரைவேட் லிமிடெட் நிறுவனம், திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு பினாமி நிறுவனங்கள் மூலம் கலப்பட நெய்யை வழங்கியதாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தாக்கல் செய்த அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு, பன்றி இறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஆரசியல் ஆதாயத்துக்காக சந்திரபாபு நாயுடு அபாண்ட குற்றச்சாட்டுக்களை கூறுவதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் பொதுவெளியில் இந்த விவகாரத்தை பேசிய ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிஐ குழுவையும் அமைத்து உத்தரவிட்டது.
இக்குழு திருப்பதி, உத்தராகாண்ட், ஸ்ரீ காளஹஸ்தி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக உத்தராகாண்ட் மாநிலம் ரூர்கேரியில் உள்ள போலோபாபா ஆர்கானிக் டயரி இயக்குநர்கள் பிபின் ஜெயின், போமில் ஜெயின், ஸ்ரீகாளஹஸ்தி அருகே உள்ள பெனுபாக்காவில் அமைந்துள்ள ஸ்ரீ வைஷ்ணவி டயரி நிறுவனத்தின் சிஇஒ அபூர்வ சவடா, திண்டுக்கல் ஏஆர் டயரி புட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் ராஜ் ராஜசேகர் ஆகிய 4 பேர் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பான அறிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) தாக்கல் செய்துள்ளது. அதில், 2022 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் (TTD) போலே பாபா ஆர்கானிக் டெய்ரி பிரைவேட் லிமிடெட் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும், இருப்பினும் பினாமி நிறுவனங்களான வைஷ்ணவி டெய்ரி மற்றும் ஏஆர் டெய்ரி மூலம் கலப்பட நெய்யை தொடர்ந்து வழங்கி வந்ததாகவும் கூறியுள்ளது.
2019 ஆம் ஆண்டில் ஒரு கிலோ நெய்யை ரூ.291க்கு முதலில் விநியோகித்த போலே பாபா டெய்ரி, 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் அதன் உற்பத்தி நடைமுறைகள் "திருப்திகரமாக இல்லை" என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த நிறுவனம் தடை செய்யப்பட்டு கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வைஷ்ணவி டெய்ரி நிறுவனம் 2020 ஆம் ஆண்டு ஒரு டெண்டரை வென்றதாகவும், அதே நேரத்தில் ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மார்ச் 2024 இல் நெய் வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக ஆவணங்களை போலியாக உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆவணத் தயாரிப்பு உட்பட, டெண்டர் செயல்பாட்டில் போலே பாபா டெய்ரி, இந்த நிறுவனங்களுக்கு தீவிரமாக உதவியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தேவைக்கேற்ப நெய்யை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, வைஷ்ணவி டெய்ரி மற்றும் ஏ.ஆர். டெய்ரி நிறுவனங்கள், கருப்புப் பட்டியலில் உள்ள போலே பாபா டெய்ரியிடமிருந்து நெய்யை பெற்றதாக கூறப்படுகிறது. அதாவது, அக்மார்க் நெய்யை வழங்குவதற்கு பதிலாக, ஆவணங்களை போலியாக தயாரித்து கலப்பட நெய்யை கோவிலுக்கு வழங்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications