உலகப்புகழ் பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது தெரிந்ததே.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் உண்டியல் காணிக்கை உள்பட பல்வேறு வருமானங்கள் குறித்த தகவல்கள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் நீண்ட காலத்திற்குப் பின்னர் திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்த சொத்து மதிப்பு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் சொத்து மதிப்பை விட அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி வெங்கடேஸ்வரா கோவில்
உலகப் புகழ்பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் நிகர சொத்துமதிப்பு ரூ.2.5 லட்சம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ, உணவு மற்றும் குளிர்பான நிறுவனமான நெஸ்லே மற்றும் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான ONGC மற்றும் IOC ஆகியவற்றின் சொத்து மதிப்பை விட அதிகம்.
நிகர சொத்து மதிப்பு
திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த1933ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிலையில் முதல் முறையாக அதன் நிகர மதிப்பை அறிவித்தது. வங்கிகளில் 10.25 டன் தங்கம் வைப்பு, 2.5 டன் தங்க நகைகள், வங்கிகளில் சுமார் ரூ.16,000 கோடி டெபாசிட் மற்றும் இந்தியா முழுவதும் 960க்கும் மேற்பட்ட நிலங்கள் திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலுக்கு சொத்துக்களாக உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்த மொத்த மதிப்பு சுமார் ரூ.2.5 லட்சம் கோடிக்கு மேல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விப்ரோ
பெங்களூரை தளமாகக் கொண்ட விப்ரோவின் ரூ.2.14 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல் அல்ட்ராடெக் சிமென்ட் சந்தை மதிப்பு ரூ.1.99 லட்சம் கோடியாக உள்ளது. சுவிட்சர்லாந்தின் பன்னாட்டு உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லேவின் இந்திய யூனிட்டின் சொத்து மதிப்பு ரூ.1.96 லட்சம் கோடி ஆகும். இந்த நிறுவனங்களின் சொத்து மதிப்பை விட திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்
தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியற்றின் சொத்து மதிப்பும் திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பை விட குறைவாக உள்ளது. NTPC லிமிடெட், வாகன உற்பத்தியாளர்களான மஹிந்திரா மற்றும் மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ், உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தியாளர். இந்தியா லிமிடெட், சுரங்க நிறுவனமான வேதாந்தா, ரியல் எஸ்டேட் நிறுவனம் DLF உள்பட பல நிறுவனங்கள் திருப்பதி கோவிலின் சொத்து மதிப்பை விட குறைவாக உள்ளது.
திருப்பதி கோவிலை விட அதிக சொத்து மதிப்பு
இந்தியாவில் சுமார் இரண்டு டஜன் நிறுவனங்கள் மட்டுமே திருப்பதி கோவிலின் நிகர சொத்து மதிப்பை விட அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹெச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், பாரத ஸ்டேட் வங்கி, பார்தி ஏர்டெல், ஐடிசி போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே திருப்பதி கோவில் சொத்து மதிப்பை விட அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications