மெட்ரோ நகரங்களின் பொழுதுபோக்கு கலாச்சாரம் வரைவில் டெக்ஸ்டைல் நகரமான திருப்பூரிலும் வர உள்ளது. தமிழ்நாட்டில் பெரு நகரங்களில் மட்டுமே இருக்கும் மால்கள் தற்போது சிறு நகரங்களுக்கும் வர துவங்கியுள்ளது.
சமீபத்தில் தஞ்சாவூரில் லாங்வால் மால் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பல மாதமாகக் கட்டப்பட்டு வரும் ஆர்னோதயா மால் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த மாலின் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் விரைவில் இந்த மால் திறக்கப்பட உள்ளது.

திருப்பூரின் புதிய அடையாளம்: இந்தியாவில் கினிட்வேர் மற்றும் ஆடை தயாரிப்பின் அடையாளமாக விளங்கும் திருப்பூர் காலம் காலமாகத் தொழில் நகரமாக இருந்தாலும் இதுவரையில் ஒரு மால் கூட இல்லை. இந்த இடைவெளியைக் கவனித்து புதிய மால்-க்கான டிமாண்ட் இருப்பதை உணர்ந்து ஆர்னோதயா மால் கட்டப்பட்டு உள்ளது.
திருப்பூர், இப்போது ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்குக்கான புதிய இலக்காக உருவெடுத்து வருகிறது. 2.6 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள ஆர்னோதயா மால், உலகத்தரம் வாய்ந்த ஷாப்பிங் மற்றும் உணவு விடுதிகளுடன் கூடிய ஒரு ஒருங்கிணைந்த பொழுதுபோக்கு மையமாக இருக்கும்.

மல்டிபிளக்ஸ்: 5 திரையரங்குகளைக் கொண்ட மல்டிபிளக்ஸ், அதில் இரண்டு பிரீமியம் பெரிய வடிவமைப்பு (PLF) திரையரங்குகள் உட்பட, திரைப்பட ஆர்வலர்களுக்கு சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்கும்.
புட் கோர்ட்: பல்வேறு வகையான உணவுகளை வழங்கும் 300 இருக்கைகள் கொண்ட புட் கோர்ட், உணவு பிரியர்களுக்கு சொர்க்கமாக இருக்கும்.
ஸ்கேட்டிங் ரிங்க் மற்றும் டர்ஃப் கோர்ட்: இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஸ்கேட்டிங் ரிங்க் மற்றும் டர்ஃப் கோர்ட் போன்ற பொழுதுபோக்கு வசதிகள் உள்ளன.

பார்க்கிங்: 800 கார்கள் மற்றும் 600 இரு சக்கர வாகனங்களை நிறுத்தக்கூடிய வசதியான பார்க்கிங் வசதி.
உயர்தர கடைகள்: பல்வேறு பிரபலமான பிராண்டுகளின் கடைகள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவை இந்த மாலில் இடம் பெறும்.
ஆர்னோதயா மால் போன்ற பெரிய அளவிலான திட்டங்கள் திருப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு, ரிடைல் விற்பனைக்கும், தனிநபர் செலவினத்திற்கும் முக்கிய பங்களிக்கும். இது உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும். மேலும், இது திருப்பூரை ஒரு முக்கியமான வணிக மற்றும் பொழுதுபோக்கு மையமாக மாற்றுவதில் சிறிய பங்கு வகிக்கும்.

ஆனால், திருப்பூர் மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில், ஆர்னோதயா மால் நிச்சயமாக திருப்பூரின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டமாக இருக்கும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications