எல்லோருக்கும் தீபாவளி முடிந்தது, ஆனால் திருப்பூர்-க்கு மட்டும் இப்போது தான் தீபாவளி துவங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் கடைசி 3 மாதம் தான் திருப்பூர்-க்கான முக்கிய வர்த்தகக் காலம், காரணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய பண்டிகையான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காரணமாக அதிகப்படியான ஆடை ஏற்றுமதி திருப்பூரில் இருந்து நடக்கும்.
இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் 55% பங்கீட்டைத் தமிழ்நாட்டின் திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் கொண்டு உள்ளனர். இதனால் வருடத்தில் இந்த 3 மாத காலம் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படும் வேளையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பணவீக்கம் திருப்பூரை மறைமுகமாகப் பாதித்துள்ளது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்கான டிமாண்ட் பணவீக்கம் அதிகமாக இருந்த போதிலும் ஏற்றுமதி தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் பணவீக்கம் காரணமாகக் குறைந்த விலை கொண்ட ஆடைகள் மட்டுமே அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளதால் திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
பொதுவாகக் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலகட்டத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தையில் இருந்து திருப்பூரில் இருந்து 8 முதல் 10 டாலர் மதிப்பிலான பேஷன் ஆடைகள் மற்றும் ஜாக்கெட்டுகளை வாங்குவது தான் வழக்கம். இதற்கு மாறாகத் தற்போது உலகளாவிய பிராண்டுகள் வெறும் 2 டாலர் விலையுள்ள எளிய டி-சர்ட்கள் போன்ற குறைந்த விலை ஆடைகளை அதிகமாக வாங்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வர்த்தகர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிக விலையுள்ள பொருட்களை வாங்க விரும்புகிறார்கள். ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழாக மாறியுள்ளது, பொதுவாக அதிக விலை கொண்ட ஆடையில் அதிக லாபம் கிடைக்கும். விலை குறைவான பொருட்களின் மார்ஜின் அளவு எப்போதும் குறைவாகவே இருக்கும்.
இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த பின்னலாடை நிறுவனமான வார்சா இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் ராஜா சண்முகம் கூறுகையில், வெளிநாடுகளில் மொத்தமாக வாங்குவோர் இந்த ஆண்டு இன்னர்வேர், டி-சர்ட் போன்ற விலை குறைவான பொருட்களை வாங்கியுள்ளனர். அதிக விலை கொண்ட ஆடைகளை வாங்க விருப்பம் காட்டவில்லை என ஈடி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் துவங்கிய காலத்தில் இருந்து அமெரிக்காவும் ஐரோப்பாவும் அதிகப் பணவீக்கத்துடன் போராடி வருகின்றன. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, இஸ்ரேல் - ஹாமாஸ் போர், சீனாவின் உள்நாட்டு டிமாண்ட் எனப் பல காரணங்களாக உற்பத்தியும், சப்ளை செயினும் பாதிக்கப்பட்டு உள்ளது.
2008-09 சர்வதேச நிதி நெருக்கடிக்குப் பின்பு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விலை குறைவான பொருட்களை வாங்கியுள்ளனர் எனவும் வார்சா ராஜா சண்முகம் தெரிவித்தார்.
எல்லோரும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் டிமாண்ட் குறைவாக உள்ளதாகப் பேசுகின்றனர், ஆஸ்திரேலியாவிலும் இந்த நிலை தான். சர்வதேச வர்த்தகம் தற்போது மந்தநிலையில் இருப்பதாக அஹானா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பார்ட்னரான கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அஹானா இன்டர்நேஷனல் நிறுவனம் ஆஸ்திரேலியாவுக்கு அதிகளவிலான ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கேஎம் சுப்பிரமணியம் கூறுகையில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் ஏற்றுமதி அதிகரிக்கும் என நம்பினோம், ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் வெளிநாடுகளில் டிமாண்ட் குறைவாக இருக்கும் காரணத்தால் சுமார் 40 சதவீத வரையில் வர்த்தகம் சரிந்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications