கடந்த ஓராண்டாக மந்தமாக இருந்த திருப்பூர் பனியன் ஏற்றுமதி தொழில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தகவல்படி பிப்ரவரியில் திருப்பூர் ஏற்றுமதி 6.4 சதவீதமும், மார்ச்சில் 5.6 சதவீதமும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முந்தைய ஆண்டைக் காட்டிலும் நாட்டின் கார்மென்ட்ஸ் ஏற்றுமதி பிப்ரவரியில் 4.8 சதவீதமும், மார்ச்சில் 1.7 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சுப்ரமணியன் கூறுகையில், 2027 வரை ஐரோப்பாவுக்கு வரி-இல்லாத அணுகல் வங்கதேசத்துக்கு உள்ளது.
இங்கிலாந்துடன் இந்தியா ஒரு வணிக ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நிறைய ரீடெய்லர்கள் இந்தியாவில் சப்ளையர்கள் மற்றும் புக்கிங் பேக்டரிகள் இருக்கின்றதா எனத் தேடுகின்றனர்.
வரும் மாதங்களில் திருப்பூரில் 10 சதவீத ஏற்றுமதி வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணைச் செயலாளர் குமார் துரைசாமி கூறுகையில், ஐரோப்பா தனது வளங்களை முடித்து விட்டது. இப்போது வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.
மேலும் திருப்பூரை சேர்ந்த 20 சதவீத ஏற்றுமதியாளர்கள் பிசினஸ் இல்லாமல் போய் விட்டனர். எனவே இப்போது இருக்கும் யூனிட்கள் முழு திறனுடன் வேலை செய்கிறது. இந்த நிலையில் திருப்பூரில் 20 சதவீதம் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது என்றார்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications