அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த 50% கூடுதல் வரி விதிப்பால், தமிழ்நாட்டின் பின்னலாடை தொழிலின் மையமாக விளங்கும் திருப்பூர் இதுவரை இல்லாமல் ஒரு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாகவே வேலை இழப்புகள் மற்றும் தொழிற்சாலை மூடல்கள் போன்ற பாதிப்புகள் வெளிவர தொடங்கியுள்ளன. பல ஏற்றுமதியாளர்கள் தங்கள் ஆடை உற்பத்தி பிரிவுகளை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திருப்பூரில் உள்ள 2,500 தொழிற்சாலைகளில் சுமார் 8 முதல் 9 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் 60%-க்கும் மேற்பட்டோர் பெண்கள் தான்.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகைதான் விற்பனையின் உச்சக்கட்ட காலமாக இருப்பதால், இந்திய ஏற்றுமதியாளர்களிடம் இருந்து செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சரக்குகள் அனுப்பப்படுவது வழக்கம். இந்த காலக்கட்டத்தில் மட்டும் அமெரிக்க சந்தைக்கு சுமார் ரூ.16,600 கோடி மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதியாகும்.

ஆனால், இந்த ஆண்டு 50% வரி விதிக்கப்பட்டுள்ளதால், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் லாபத்தை குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து RRK காட்டன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். ராஜ்குமார் கூறுகையில், "திருப்பூர் மற்றும் பல்லடத்தில் எனக்கு 5 தொழிற்சாலைகள் உள்ளன. அதில் சுமார் 2,000 பேர் வேலை செய்து வருகின்றனர். அமெரிக்காவுக்காக தயாரிக்கப்பட்ட ரூ.60 கோடி மதிப்புள்ள பொருட்கள் தற்போது தேங்கிக் கிடக்கின்றன. அமெரிக்க சந்தைக்கு மட்டும் சேவை வழங்கி வந்த 2 தொழிற்சாலைகளை நாங்கள் ஏற்கனவே மூடிவிட்டோம். இதனால் சுமார் 1,000 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்"
அதேசமயம், அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காக ரூ.25 கோடி மதிப்புள்ள பொருட்கள் தயாராக உள்ளது. ஆனால், வாங்குபவர்கள் தற்போதைய ஆர்டர்கள் மற்றும் எதிர்கால ஆர்டர்களுக்கு 20 முதல் 25% தள்ளுபடி கேட்கின்றனர்" என்று வேதனை தெரிவித்தார். வால்மார்ட் உள்ளிட்ட பெரிய பிராண்டுகளுக்கு பொருட்களை வழங்கும் ராஜ்குமார், நவம்பர் 15ஆம் தேதிக்கு பிறகும் புதிய ஆர்டர்கள் வராவிட்டால், ஐரோப்பிய சந்தைக்கு சேவை செய்யும் தொழிற்சாலைகள் தவிர மற்றவற்றின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.
அதேபோல், பெயரை வெளியிட விரும்பாத மற்றொரு ஏற்றுமதியாளர், தனது 4 தொழிற்சாலைகளில் ஒன்றை தற்காலிகமாக மூடியுள்ளதாகவும், சுமார் 850 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவரது ரூ.62 கோடி மதிப்புள்ள பொருட்களில் 30% பொருட்கள், அமெரிக்கா விதித்த வரியால் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மற்றொரு ஏற்றுமதியாளர் கூறுகையில், தனது இரண்டு தொழிற்சாலைகளில் ஒன்றை மூடிவிட்டதாகவும், இதனால் 1,000 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். அவருக்கும் சுமார் ரூ.70 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேங்கி கிடக்கின்றன. மேலும், இந்த வரி ஜனவரி மாதத்திற்கு பிறகும் தொடர்ந்தால், நான் எனது 2-வது தொழிற்சாலையையும் மூட வேண்டியிருக்கும்" என்று கவலை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆடைத் தொழில் என்பது தொழிலாளர்களை சார்ந்தது. ஒரு தொழிலை உருவாக்க 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும். நான் இந்த தொழிற்சாலைகளில் சுமார் ரூ.150 கோடி முதலீடு செய்துள்ளேன். பங்களாதேஷ், வியட்நாம், கம்போடியா போன்ற போட்டியாளர்கள் இருப்பதால், வாங்குபவர்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன. இந்திய அரசாங்கம் அமெரிக்காவுடன் சிறந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றால், நாங்கள் மிகவும் கடினமான எதிர்காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்றும் அவர் கூறினார்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications