அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை திட்டமிட்டப்படி அமல்படுத்தியுள்ளது. இந்த வரி மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தாக்கத்தை சமாளிக்க, இந்தியா 40 நாடுகளில் தனிப்பட்ட முறையில் அணுக திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சி டிரம்ப்-ன் வரியால் அதிகம் பாதிக்கப்படும் டெக்ஸ்டைல் துறையை மேம்படுத்தவது மட்டும் அல்லாமல் இத்துறைக்கு புதிய சந்தைகளை கண்டறிவதற்கும் உதவும் என்று அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம், இந்தியாவின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும், வேலைவாய்ப்பை பாதுகாக்கவும் முக்கிய பங்காற்றும் என்பதால், பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதேபோல் அமெரிக்காவின் 50 சதவீத வரியால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு சந்தையில் சில தடுமாற்றம் இருக்கும் ஆனாலும் வேகமாக மீண்டு வரக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இந்தியா அரசு சார்பிலும், தொழிற்துறை சார்பிலும் டிரம்ப்-ன் 50 சதவீத வரியால் பாதிக்கப்பட்ட டெக்ஸ்டைல் துறை ஏற்றுமதியை மேம்படுத்த பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட 40 நாடுகளில் தனிப்பச்ட முறையில் அணுக முடிவு செய்தப்பட்டு இதற்கான பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இந்த 40 நாடுதள் பட்டியலில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, போலந்து, கனடா, மெக்சிகோ, ரஷ்யா, பெல்ஜியம், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் அடங்கும். ஈடி பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவல் படி ஒரு அதிகாரி கூறுகையில், இந்த 40 சந்தைகளிலும் இந்தியா தரமான, நிலையான மற்றும் புதுமையான டெக்ஸ்டைல் பொருட்களை வழங்கும் என நம்பகமான சப்ளையராக தன்னை நிலைநாட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த திட்டத்தில் இந்திய தொழில் துறை மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்களும் (EPCs) முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியா ஏற்கனவே 220 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது, ஆனால் இந்த 40 நாடுகளே தற்போது அமெரிக்க ஏற்றுமதி பொருட்களை திருப்பிவிட முக்கிய திறவுகோலாக உள்ளன. இந்த நாடுகள் ஆண்டுக்கு 590 பில்லியன் டாலருக்கு மேல் டெக்ஸ்டைல் மற்றும் ஆடை இறக்குமதி செய்கின்றன.
தற்போது இந்த 40 நாடுகளில் இந்தியாவின் சந்தை பங்கு 5-6 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், இந்த திட்டம் மூலம் அதை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த முயற்சி, இந்திய டெக்ஸ்டைல் தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்தியாவின் டெக்ஸ்டைல் ஏற்றுமதி ஹப் ஆக விளங்கும் திருப்பூர் அமெரிக்காவின் வரி பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications