பங்களாதேஷ் நாட்டின் அரசியல் மாற்றம், மக்கள் போராட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இதன் மூலம் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பகுதி வகிக்கும் டெக்ஸ்டைல் துறை பெரிய அளவில் பாதித்துள்ளது மட்டும் அல்லாமல் அந்நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்து வந்த வெளிநாட்டு டெக்ஸ்டைல் பிராண்டுகள் அடுத்தடுத்து திருப்பூர் நிறுவனங்களுடன் கைகோர்க்கத் துவங்கியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பங்களாதேஷ் நாட்டில் வர்த்தகம் செய்து வந்த வெளிநாட்டு பிராண்டுகளிடம் இருந்து சுமார் 450 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடை ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற்றுள்ளது.

இதில் முக்கியமாக ஜெர்மனி நாட்டின் KiK, நெதர்லாந்து நாட்டின் Zeeman மற்றும் போலந்தின் Pepco உள்ளிட்ட உலகின் முன்னணி பிராண்டுகள், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு முன் டெலிவரி செய்ய ஆர்டர்களை வழங்கியுள்ளனர். மேலும் ஆர்டர் செய்யப்பட்ட ஆடையின் சராசரி விலை 3 டாலர் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் (TEA) தலைவர் கேஎம்.சுப்பிரமணியன் கூறினார்.
திருப்பூர் கடந்த 14 நாட்களில் குழந்தைகள் ஆடை, இரவு நேரத்தில் அணியும் ஆடை, டாப்ஸ் மற்றும் பைஜாமாக்கள் என பின்னலாடைகளுக்கான ஆர்டர்களை அதிகளவில் குவிந்துள்ளது. கேஎம்.சுப்பிரமணியன் மேலும் பேசுகையில் "இது போன்று அதிகளவிலான ஆர்டர்கள் செப்டம்பர் மாதத்தில் வந்ததில்லை. உலகளாவிய பிராண்டுகள் பொதுவாக ஸ்பிரிங் மற்றும் ஃபால் சீசனுக்கு டிசம்பர்-ஜனவரி மாதங்களில் ஆர்டர்களை வழங்கும், மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு ஜூன்-ஜூலை மாதங்களில் ஆர்டர்களை வழங்கும். ஆனால் செப்டம்பர் மாதத்தில் 450 கோடி ரூபாய்க்கு ஆர்டர்கள் குவிந்துள்ளது இதுதான் முதல் முறை" என்று கூறினார்.
திருப்பூர் போலவே நொய்டா ஆடை ஏற்றுமதி கிளஸ்டர் (NAEC) கடந்த ஆண்டை கட்டிலும் 15% அதிக ஆர்டர்களை Zara பிராண்டில் இருந்து பெற்றுள்ளது. Zara வைத்த ஆர்டர்களில் 5-9 டாலர் மதிப்பிலான பெண்களின் டாப்ஸ் மற்றும் மேல் ஆடைகளுக்கு ஆர்டர் செய்துள்ளது என்று NAEC இன் தலைவர் லலித் துக்கிரால் கூறினார்.
"மேலும் பல பிராண்ட் எங்களுக்கு 60 நாட்களுக்குள் ஆர்டரை டெலிவரி செய்யுமாறு கேட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் விற்பனை செய்ய திட்டமிட்டது. ஆண்டின் ஆகஸ்ட் - செப்டம்பர் காலத்தில் அதிகப்படியான புதிய ஆர்டர்கள் வருவது உண்மையில் எங்களுக்கு அசாதாரணமானது" என்றும் நொய்டா NAEC அமைப்பின் தலைவர் கூறினார்.
அப்பாரல் எக்ஸ்போர்ட் புரோமோஷன் கவுன்சிலின் தெற்கு பிராந்தியத்தின் தலைவர் ஏ சக்திவேல், வருடத்தின் இக்காலகட்டத்தில் ஆர்டர் வருவது குறித்துப் பேசுகையில், சில உலகளாவிய பிராண்டுகள் பங்களாதேஷிலிருந்து இந்தியாவிற்கு ஆர்டர்களை மாற்றியதால் திருப்பூர் புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளது என்று விளக்கியுள்ளார்.
ஆனால் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே இலவச வர்த்தக ஒப்பந்தம் இருந்திருந்தால், உலகளாவிய பிராண்ட்களிடமிருந்து அதிக ஆர்டர்கள் வந்திருக்கும். அரசு ஐரோப்பிய ஒன்றியத்துடன் விரைவில் FTA கையெழுத்திட்டால், அதிக ஆர்டர்களைப் பிடிக்க முடியும். பங்களாதேஷ் ஐரோப்பிய ஒன்றியத்துடன் FTA கொண்டுள்ளது, இது அவர்களுக்கு பெரிதும் உதவுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
தற்போது உலகளாவிய பிராண்டுகள் திருப்பூரில் உள்ள 10 புதிய பின்னலாடை தொழிற்சாலைகளைத் தேர்ந்தெடுத்து, நீண்ட கால உற்பத்திக்கான சாத்தியக்கூர்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன என்றும் கேஎம்.சுப்பிரமணியன் கூறினார்.
கடந்த நிதியாண்டு (FY24) இல் பங்களாதேஷின் ரெடிமேட் ஆடை ஏற்றுமதி இந்தியாவை ஒப்பிடுகையில் 3.2 மடங்கு அதிகமாக இருந்தது, ஆனால் 2025ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒப்பிடுகையில் 2.5 மடங்காகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பங்களாதேஷ் நாட்டில் ஏற்பட்டு உள்ள பொருளாதார நிலையற்ற தன்மை தான்.
இதேவேளையில் இந்தியாவில் அதிகப்படியான வெளிநாட்டு ஆடை பிராண்டுகளுக்கான ஆர்டர் வருவதைப் பார்க்கும் போது பங்களாதேஷ் ஆடை வர்த்தக சந்தைக்குள் இந்தியா நுழைந்து வர்த்தகத்தைக் கைப்பற்றுவதை உறுதி செய்கிறது என்று CareEdge Ratings தெரிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications