தட்டிதூக்கும் திருப்பூர்.. இனி கையில் புடிக்க முடியாது போலியே.. வாவ்..!!

திருப்பூர்: இந்தியாவின் மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஏற்றுமதி ஹப் ஆக இருக்கும் திருப்பூர் கடந்த 2023-24ம் ஆண்டில் 14 சதவிகிதம் சரிந்த பின்னலாடை ஏற்றுமதி, 2024-25ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மீண்டு வந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதி மையமான திருப்பூர் மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது.

பிரிமார்க், டெஸ்கோ, ஜார்ஜ் அட் அஸ்டா, டெக்காத்லான் போன்ற உலகளாவிய பிராண்டுகளின் பெரிய அளவிலான ஆர்டர்களே இந்த தடாலடி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 2024-25 ஆம் நிதியாண்டில் ஏப்ரல் மாதத்தில் 1.5 சதவிகிதம் என்ற சிறிய அளவிலான வளர்ச்சி உடன் தொடங்கிய ஏற்றுமதி, மே மற்றும் ஜூன் மாதங்களில் முறையே 11.4 சதவிகிதம் மற்றும் 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.

தட்டிதூக்கும் திருப்பூர்.. இனி கையில் புடிக்க முடியாது போலியே.. வாவ்..!!

அமெரிக்காவைச் சேர்ந்த கேப், கார்டர்ஸ், வால்மார்ட் போன்ற பிராண்டுகளும் திருப்பூரை நோக்கி திரும்பியுள்ளன. அதேபோல், நெக்ஸ்ட், டன்ஸ் போன்ற ஐரோப்பிய பெரு நிறுவனங்கள் மற்றும் டார்கெட், வூல்வொர்த்ஸ் போன்ற ஆஸ்திரேலியாவின் பெரும் நிறுவனங்களும் திருப்பூரை தனது உற்பத்தியாளராக தேர்வு செய்துள்ளன என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (TEA) தெரிவித்துள்ளது.

கடந்த நிதியாண்டில் 10 மாதங்களாக ஏற்றுமதி அளவு சரிவிலும் மந்த நிலையிலும் இருந்தன. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது உக்ரைன் போர், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, உலகளாவிய வணிகத்தின் மந்த நிலை என பல்வேறு காரணங்கள் இருந்தது. தற்போது உலகளாவிய மக்கள் பொருட்களை வாங்குவதும், செலவு செய்வதும் அதிகரித்து வருவதால் இந்த மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

இதுக்குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறுகையில் ஜூன் மாதத்திலும் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான பின்னலாடை ஏற்றுமதி கண்டுள்ளோம். 'சீனா பிளஸ் ஒன்' கொள்கையின் காரணமாக உலகளாவிய முக்கிய நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மற்றும் சப்ளை செயினை பல நாடுகளுக்கு பிரித்துள்ளது.

பங்களாதேஷ் போன்ற முக்கிய டெக்ஸ்டைல் உற்பத்தி சந்தையில் கூலி உயர்வு ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டு பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு எப்போதும் விடவும் அதிகப்படியான ஆர்டர்கள் வெளிநாட்டு நிறுவனங்களால் குவிந்துள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இறுதியில், பங்களாதேஷ் நாட்டில் உள்ள டெக்ஸ்டைல் தொழிற்சாலை தொழிலாளர்களின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் 75 டாலரிலிருந்து 113 டாலராக 56 சதவிகிதம் உயர்த்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனால் உற்பத்தி கட்டணம் அதிகமான காரணத்தால் உலகளாவிய வாடிக்கையாளர்கள் திருப்பூர் போன்ற முக்கிய டெக்ஸ்டைல் ஹப்களை நோக்கி திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2023 ஏப்ரலில் திருப்பூரின் ஏற்றுமதி 290 மில்லியன் டாலரிலிருந்து 2024 ஏப்ரலில் 294 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதுவே மே மாதங்களில் 323 மில்லியன் டாலருக்கு எதிராக 360 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் 90 சதவீதமும், அனைத்து பின்னலாடை ஏற்றுமதியில் 55 சதவீதமும் திருப்பூர் பங்கு வகிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+