திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் கட்டப்பட்டு வரும் மினி டைடல் பார்க் அதாவது நியோ டைடல் பார்க், டிசம்பர் இறுதியில் தயாராக இருக்கும் என தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் பொதுத் தொடர்புத் துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையிலும் வெளிநாட்டு டெக் நிறுவனங்கள் அடுத்தடுத்து தமிழ்நாட்டின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களில் அலுவலகத்தை அமைத்து வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக துவங்க இருக்கும் ஸ்டார்ட்அப் மற்றும் டெக் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்களை நேற்று திறந்து வைத்தார்.

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் தற்போது கட்டப்பட்டு வரும் டைடல் பார்க் கட்டுமான நிலை குறித்து தெரிந்துக்கொள்ள மக்கள் ஆர்வமாக இருந்த நிலையில், தற்போது டெக்ஸ்டைல் நகரமான திருப்பூர் நகருக்கு அருகில் திருமுருகன்பூண்டியில் கட்டப்பட்டு வரும் மினி டைடல் பார்க் குறித்த அப்படேட்டும் வெளியாகியுள்ளது.
எட்டு தளங்களைக் கொண்ட திருப்பூர் மின் டைடல் பார்க் கட்டிடம் மொத்த 66,139 சதுர அடி பரப்பளவைக் கொண்ட அலுவலக இடமாக அமைந்துள்ளது, ஒவ்வொரு தளமும் சுமார் 6,500 சதுர அடி பரப்பைக் கொண்டுள்ளது என்று கூறினார்.
இந்த ஐடி பார்கின் தரைதளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் கேண்டீன் அமைக்கப்படும். IT நிறுவனங்கள் இரண்டாம் நிலை நகரங்களில் மட்டுமே அலுவலகங்களை அமைக்கும் என்ற நம்பிக்கைக்கு மாறாக, 3ஆம் நிலை நகரமான திருப்பூர்-லும் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும் என்ற நம்பிக்கையில் திருப்பூரில் டைடல் பார்க் அமைக்கப்பட உள்ளது.
தஞ்சாவூர் மினி டைடல் பூங்கா: தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா, ரூ.30.50 கோடி செலவில் சுமார் 3.4 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 55,000 சதுர அடி அலுவலக இடத்துடன் கூடிய இந்த பூங்கா, தொழில்முனைவோர் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இங்கு, ஸ்டார்ட்-அப்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை தங்கள் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
சேலம் மினி டைடல் பூங்கா: சேலம் மாவட்டம், கருப்பூரில் ரூ.29.50 கோடி செலவில் கட்டப்பட்டு உள்ள இந்த பூங்கா, சேலம் நகரின் ஐடி துறையின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகம் அளிக்கும். இந்த பூங்காவின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன.
தஞ்சாவூர் மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தது மட்டும் அல்லாமல் இந்த ஐடி பார்க்கில் அலுவலகம் அமைக்க குத்தகை ஒப்பந்தம் செய்தவர்களுக்கு அவர்களுக்கான இட ஒதுக்கீட்டு ஆணையயும் நேற்று கொடுத்தார். இதன் படி தஞ்சாவூர் நியோ டைடல் பார்க்கில் Hamly Business Solutions, Inforios Software Technologies ஆகியவை அலுவலகம் அமைக்கிறது. இதேபோல் சேலம் நியோ டைடல் பார்க்கில் Namma Office, AKS Hitech Smart Solutions, Tamil Zorous, Telth Healthcare, Axis Healthcare ஆகியவை அலுவலகம் அமைக்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications