இந்தியாவின் பின்னலாடை தலைநகரம் என பெயர் பெற்றதுதான் தமிழ்நாட்டின் திருப்பூர் நகரம். லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பையும் இந்திய பொருளாதாரத்திற்கு பல லட்சம் கோடி பங்களிப்பையும் தருகிறது திருப்பூர். 24 மணி நேரமும் இங்கு இயங்கிக் கொண்டிருக்க கூடிய இந்த பின்னலாடை ஆலைகள் பலரது வாழ்க்கையில் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்கின்றன.
ஆனால் ஒரு சமயத்தில் இந்த வாழ்வாதாரத்திற்கே பெரிய பிரச்சனை ஏற்பட்டது. அந்த பிரச்சனையை சரி செய்த திருப்பூர் நகரம் அதிலிருந்து இன்னும் வலிமையாக மீண்டு எழுந்து வந்து உலகிற்கே முன்னுதாரணமாக மாறி இருக்கிறது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த பின்னலாடை உற்பத்திக்கான சூழல்களைக் கொண்ட நகரமாக திருப்பூர் இருக்கிறது. ஆனால் இந்த வெற்றி அத்தனை எளிதாக வந்துவிடவில்லை.

திருப்பூரில் பல நூறு பின்னலாடை ஆலைகள் இயங்குகின்றன. இவற்றில் பயன்படுத்தப்படக் கூடிய சாய கழிவுகள் நொய்யல் ஆற்றில் கலந்து அந்த தண்ணீரை மாசுபடுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் இருந்தது. இதன் காரணமாக சுற்றுசூழல் மாசு ஏற்பட்டதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் வரை பொதுநல வழக்காக சென்றது. இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் 700 சாய ஆலைகளை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஆலைகள் மூடப்பட்டு பல்லாயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் உருவானது.
ஒவ்வொரு நாளும் திருப்பூர் நகரில் 50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் இந்த பிரச்சனையை திருப்பூர் நகரம் மிக சாமர்த்தியமான முறையில் எதிர் கொண்டது. Zero liquid discharge என்ற முறைக்கு மாறியது. ஆடைகளில் பயன்படுத்தப்படக்கூடிய சாயங்கள் ஆற்றில் கலப்பது சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் பிரச்சனை. எனவே ஆலைகளில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட வெளியே வராத முறையில் ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார்கள். இதுதான் ஜீரோ லிக்விட் டிஸ்சார்ஜ் சிஸ்டம் என அழைக்கப்படுகிறது.

இதன்படி ஆலைகளில் இருந்து வெளியாக கூடிய கழிவுகள் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு செல்லும் வகையில் குழாய்கள் பதிக்கப்பட்டன. இங்கே பல கட்டங்களாக அந்த தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. முதலில் பெரிய பெரிய துகள்கள் அகற்றப்படுகின்றன பின்னர் கரிம கழிவுகள் நீக்கப்படுகின்றன இதனை அடுத்து நீரில் இருக்கும் நிறம் மற்றும் உப்புகளை ரசாயனங்கள் கொண்டு அகற்றுகிறார்கள். இறுதியாக ஆர்ஓ பயன்படுத்தப்பட்டு இந்த தண்ணீர் 92 சதவீதம் சுத்தமான நீராக மீண்டும் ஆலைகளுக்கே பயன்படுத்தப்படுகிறது.
அதாவது நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் இந்த சாய ஆலைகளில் இருந்து கழிவு நீர் வெளியே வருவது தடுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் திருப்பூர் நகரில் 130 மில்லியன் லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஒரு சொட்டு தண்ணீரும் வீணாவதில்லை. எந்த கழிவுகளும் நம்முடைய நதிகளில் கலந்து சுற்றுச்சூழலுக்கு மாசும் ஏற்படுத்தவில்லை.
இதனால் திருப்பூர் நகரத்தின் ஏற்றுமதி 12,000 கோடி ரூபாயில் இருந்து 40 ஆயிரம் கோடி ரூபாய் என உயர்ந்திருக்கிறது. பூமிக்கும் எந்த ஒரு சுற்றுச்சூழல் தாக்கமும் இல்லை. அதே வேலையில் வேலை வாய்ப்பு கெடவில்லை, ஆலைகளும் மூடப்படவில்லை.நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் உலகின் பல்வேறு ஆடை உற்பத்தி நகரங்களுக்கும் முன் உதாரணமாக திருப்பூர் மாறி இருக்கிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications