தமிழ்நாட்டின் ஐடி சேவை துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகிறது. வெளிநாட்டு டெக் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களிலும் தங்கள் அலுவலகங்களை தொடர்ந்து அமைத்து வருகின்றன. இந்த சூழலில், மாநிலத்தில் புதிதாக தொடங்கப்படும் ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட மினி டைடல் பூங்காக்களை திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து தமிழ்நாட்டில் தற்போது கட்டப்பட்டு வரும் டைடல் பூங்காக்களின் கட்டுமான நிலை குறித்து தெரிந்துக்கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த நிலையில், டெக்ஸ்டைல் நகரமாக அறியப்படும் திருப்பூர் நகருக்கு அருகில், திருமுருகன்பூண்டியில் கட்டப்பட்டு வரும் மினி டைடல் பார்க் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

TIDEL Neo Park: திருப்பூரில் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மையமான டைடல் நியோ பூங்காவின் கட்டுமானப் பணிகள் வேகமாக நடந்து வரும் வேளையில் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. 60,000 சதுர அடி பரப்பளவில் கட்டமைக்கப்படும் இந்த தகவல் தொழில்நுட்ப மையம், திருப்பூர் பகுதியில் ஐடி துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐடி ஹப் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்படத் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
8 தளம்: திருப்பூரில் கட்டப்பட்டு வரும் இந்த மினி டைடல் பார்க், எட்டு தளங்களைக் கொண்ட ஒரு கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த பரப்பளவு 66,139 சதுர அடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும் சுமார் 6,500 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. இதனால், பலதரப்பட்ட நிறுவனங்களும் இங்கு தங்கள் அலுவலகங்களை அமைத்துக்கொள்ள முடியும். இது பல்வேறு நிறுவனங்களுக்கு ஏற்ற இடமாக அமையும் என்று கருதப்படுகிறது.

முக்கிய வசதிகள்: இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவின் தரை தளத்தில் வாகன நிறுத்துமிடம் மற்றும் கேண்டீன் போன்ற வசதிகள் அமைக்கப்படும். இதனால், இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்.
மூன்றாம் நிலை நகரங்கள்: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இரண்டாம் நிலை நகரங்களில் மட்டுமே அலுவலகங்களை அமைக்கும் என்ற பொதுவான கருத்துக்கு மாறாக, மூன்றாம் நிலை நகரமான தஞ்சாவூரிலும், திருப்பூரிலும் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும் என்ற நம்பிக்கையுடன் இந்த டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர்-க்கு ஜாக்பாட்: இதன் மூலம், திருப்பூர் நகரமும் ஐடி சேவை துறையில் முக்கிய இடத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மினி டைடல் பார்க் கட்டுமானமானது, திருப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
ஐடி வேலைவாய்ப்புகள்: இந்த நியோ டைடல் பார்க் மூலம் புதிய ஐடி சேவை தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதன் மூலமும், உள்ளூரில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் உள்ளூர் பொருளாதாரம் மேம்படும். தஞ்சாவூரில் திறக்கப்பட்ட டைடல் பார்க் மூலம் மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் கிடைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பூர் பொருளாதாரம்: டைடல் நியோ பூங்கா, திருப்பூர் நகரின் தொழில் மற்றும் பொருளாதாரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. டெக்ஸ்டைல் துறையை தாண்டி ஐடி சேவை துறையிலும் திருப்பூர் வளர்ச்சி அடைய உள்ளது.

டெக் நிறுவனங்கள்: இப்புதிய நியோ டைடல் பார்க் 60,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படுவது மூலம், பல்வேறு அளவிலான ஐடி சேவை மற்றும் டெக் நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை அமைப்பதற்கும், செயல்படுத்துவதற்கும் போதுமான இடவசதியை வழங்கும். இதேபோல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய நோக்கம்: இந்த பூங்காவின் முக்கிய நோக்கம், திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகும். ஐடி சேவை துறையில் திறமையான பணியாளர்கள் தேவை அதிகரித்து வரும் நிலையில், டைடல் நியோ பூங்கா உள்ளூர் திறமைகளை மேம்படுத்துவதற்கும், அவர்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் ஒரு முக்கிய தளமாக அமையும்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த மையம் செயல்படத் தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு, திருப்பூர் பகுதியில் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications