திருப்பூர்-க்கு பொற்காலம் ஆரம்பம்.. ஆனா இதுமட்டும் நடக்கணுமே..

இந்திய டெக்ஸ்டைல் துறைக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உருவாகி எப்போதும் இல்லாத வளர்ச்சி அடையப்போவதாக ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. நாட்டின் மொத்த டெக்ஸ்டைல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கும் திருப்பூருக்கு இது மிகப்பெரிய ஜாக்பாட் ஆக மாறப்போகிறது.

இதனால் அடுத்த சில வருடத்தில் புதுபுது தொழிற்சாலைகள் உருவாகி, திருப்பூரின் ஏற்றுமதி பெரிய அளவில் உயரும் என கணிக்கப்படுகிறது.

திருப்பூர்-க்கு பொற்காலம் ஆரம்பம்.. ஆனா இதுமட்டும் நடக்கணுமே..

சீனா+1 கொள்கை, குளோபல் சப்ளை செயினில் பல்வகைப்படுத்துதல், வர்த்தக ஒப்பந்தம் மூலம் எளிதாக புதிய சந்தையில் வர்த்தகம் பெறும் வாய்ப்பு என அனைத்தும் இந்திய டெக்ஸ்டைல் துறை பல ஆண்டு வளர்ச்சி பாதையில் நுழைகிறது.

ஆனால் இதில் ஒரு பிரச்சனை உள்ளது, இந்தியாவும், இந்திய நிறுவனங்களும் இந்த வாய்ப்பை எப்படி விரைவாக கைப்பற்றி, உற்பத்தியை மேம்படுத்தி, சர்வதேச சந்தையில் விலை போட்டியை சமாளித்து தொடர்ந்து ஏற்றுமதி மற்றும் சந்தை பங்கீட்டை பெறப்போகிறது என்பதில் தான் அனைத்தும் உள்ளது என 360 ஓன் கேபிட்டல் ஆராய்ச்சி அமைப்பின் ரிப்போர்ட் கூறுகிறது.

சுருக்கமாக சொன்னால் வாய்ப்புகள் அதிகமாக இருக்கு, ஆனால் இந்தியாவால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியுமா என்பது தான் முக்கியமான சவலாக உள்ளது.

Also Read

இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த வேண்டுமெனில் நிலையான விரிவாக்கம், இணைக்கப்பட்ட உற்பத்தி, வலுவான வாடிக்கையாளர் உறவு மூலம் எளிதாக எட்டிவிட முடியும் என 360 ஓன் கேபிட்டல் ஆராய்ச்சி அமைப்பின் ரிப்போர்ட் கூறுகிறது.

உலகின் பெரும்பாலான பிராண்டுகள் சீனாவை விடுத்து மற்ற நாடுகளில் உற்பத்தி கூட்டாளிகளை தேடி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சீனாவை தொடர்ந்து கைவிட்டு பிற நாட்டு சப்ளையர்களை தேடி வருகின்றனர். இத்தகைய வாய்ப்புகள், இப்போது தான் முதல் முறையாக கிடைக்கிறதா என்றால் இல்லை, இதற்கு முன்பே கிடைத்த நிலையில் இந்தியா இதை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது தான் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

உதாரணமாக கடந்த 20 வருடமாக உலகளாவிய ஆடை ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கீடு என்பது தொடர்ந்து 3 சதவீதமாகவே உள்ளது. இதுவே பங்களாதேஷ் 9-10 சதவீதமாக உள்ளது, வியட்நாம் 6-7 சதவீதமாக உள்ளது.

இந்தியாவுக்கும் உலக நாடுகளுக்குமான வர்த்தக கொள்கை சிறப்பாக இருந்தும், பங்களாதேஷ் நாட்டில் மக்கள் புரட்சி வெடித்து டெக்ஸ்டைல் துறை முடங்கிய வேளையிலும், இந்தியாவால் பெரிய வர்த்தக வாய்ப்பை பெற முடியாமல் போனது.

ஐடி துறையை போலவே இந்தியாவின் டெக்ஸ்டைல் துறையும் ஊழியர்கள் அடிப்படையிலான வர்த்தகத்தையே முன்னிறுத்துகிறது. அதாவது ஊழியர்கல் செலவுகள் அடிப்படையில் தான் தயாரிப்பின் பொருட்களின் விலை நிர்ணயம் செய்கிறது.

இதற்கு மாறாக Buyerகள் இந்தியாவின் உற்பத்தி திறன், பொருட்கள் தயாரிக்கும் திறன், நேரம், லாஜிஸ்டிக்ஸ், சப்ளை செயின் பிரச்சனை இல்லாமல் இயங்க முடிகிறதா போன்றவற்றை அதிகம் பார்க்கிறது. இதில் தான் இந்தியாவும், இந்திய டெக்ஸ்டைல் நிறுவனங்களும் அதிகளவில் மாட்டிக்கொண்டு உள்ளது.

இந்த சவால்களை சமாளித்தாலே தற்போது சந்தையில் உருவாகியிருக்கும் வாய்ப்புகளை எளிதாக பெற்றுவிட முடியும். இதனால் இந்திய டெக்ஸ்டைல் துறையில் இருக்கும் மிகப்பெரிய structural gap-ஐ சரி செய்வது தான் இந்தியாவுக்கான வெற்றிக்கு வழிவகுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+