இந்தியாவின் டெக்ஸ்டைல் தலைநகரம் என்று அழைக்கப்படும் திருப்பூருக்கு, 2024-25 நிதியாண்டில் பங்களாதேஷில் ஏற்பட்ட அரசியல் பிரச்சனை எதிர்பாராத விதமாக ஒரு பெரிய வர்த்தக வாய்ப்பை கொடுத்துள்ளது.
திருப்பூர் தமிழ்நாட்டில் குட்டி நகரமாக இருந்தாலும், இந்தியளவில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாட்டின் மொத்த டெக்ஸ்டைல் உற்பத்தியில் சுமார் 70% பங்களிப்பைத் திருப்பூர் மட்டுமே கொண்டுள்ளது. மேலும், இந்தியாவின் மொத்த டெக்ஸ்டைல் ஏற்றுமதியில் சுமார் 55% பங்கீட்டையும் திருப்பூர் கொண்டுள்ளது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் கொங்கு மண்டலத்தில் திருப்பூர் எப்போதுமே மாஸ் தான்.

இந்நிலையில், பங்களாதேஷ் வீழ்ச்சியில் திருப்பூர் மிகப்பெரிய வர்த்தகத்தைப் பெற்றதன் மூலம் 2024-25 நிதியாண்டில் முதன்முறையாக 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடைகளை ஏற்றுமதி செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வரலாற்றிலேயே முதல் முறையாக 40000 கோடி ரூபாய் என்ற அளவீட்டைக் கடந்துள்ளது.
பங்களாதேஷில் நிலவிய அரசியல் நெருக்கடி காரணமாக, சர்வதேச டெக்ஸ்டைல் ஆடை நிறுவனங்கள் புதிய சப்ளையர்களையும், புதிய நாட்டையும் தேடத் தொடங்கின. இந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட திருப்பூர் டெக்ஸ்டைல் தொழிலதிபர்கள் மொத்த வர்த்தகத்தையும் வளைத்துப்போட்டனர்.
கடந்த நிதியாண்டில் திருப்பூரில் இருந்து சுமார் 33,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 40,000 கோடி ரூபாய் அளவீட்டைத் தாண்டியுள்ளது. இது உலகளாவிய ஜவுளி விநியோகச் சங்கிலியில் திருப்பூரின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. இதன் மூலம் இனி வரும் காலத்தில் ஏற்றுமதி அளவுகள் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நிதியாண்டில், பிரைமார்க், டெஸ்கோ, நெக்ஸ்ட், மார்க்ஸ் & ஸ்பென்சர், வார்னர் பிரதர்ஸ், வால்மார்ட் மற்றும் டாமி ஹில்ஃபிகர் போன்ற பல முன்னணி சர்வதேச பிராண்டுகள் திருப்பூரில் உள்ள உற்பத்தியாளர்களிடம் கணிசமான ஆர்டர்களை வழங்கின.
இந்த பிராண்டுகள் மட்டும் அல்லாமல் டார்கெட் மற்றும் வூல்வொர்த்ஸ் போன்ற ஆஸ்திரேலிய ரீடைல் விற்பனை நிறுவனங்களும், டன்ஸ் போன்ற ஐரோப்பிய நிறுவனங்களும் திருப்பூர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக ஆர்டர்கள் திருப்பூர் உற்பத்தியாளர்களுக்குக் கொடுத்த காரணத்தால் ஒரு வருட இடைவெளியில் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆடைகளைக் கூடுதலாகத் திருப்பூர் ஏற்றுமதி செய்துள்ளது.
திருப்பூர் ஒரு பொருளாதார மையமாக மட்டுமல்லாமல், அதிகளவிலான வேலைவாய்ப்புகளைக் குறிப்பாக ப்ளூ காலர் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இன்ஜின் ஆகவும் திகழ்கிறது. சுமார் 10 லட்சம் மக்கள் திருப்பூர் டெக்ஸ்டைல் துறையில் மட்டும் வேலை செய்கின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த தொழிலாளர்களில் சுமார் 65% பெண்கள். இதனால் இப்பகுதியில் தனிநபர் வருமானத்தில் பெண்களின் பங்கு சற்று அதிகம்.
இதனால் வரும் காலத்திலும் திருப்பூர் வெளிநாட்டு பிராண்டுகளின் கூடுதல் ஆர்டர்கள் மூலம் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவின் டாப் 10 வேகமாக வளர்ந்து வரும் 3ஆம் நிலை நகரங்களில் ஒன்றாக திருப்பூர் திகழ்கிறது. இதேவேளையில் திருப்பூரில் தற்போது ஐடி சேவை துறையை வளர்க்க ஸ்டாலின் தலைமையிலான அரசு நியோ டைடல் பார்க் கட்டி வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா திருப்பூரின் இந்த மகத்தான சாதனையைப் பாராட்டியுள்ளார். 2025 நிதியாண்டில் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியை எட்டியுள்ள திருப்பூர், முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 20% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வாய்ப்புகள் வரும்போது, ஒரு வலுவான வணிகச் சூழல் எப்போதும் சிறப்பாகச் செயல்படத் தயாராக இருக்கும் என்று டிஆர்பி ராஜா அவர்கள் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார். உலகளாவிய சந்தைகளை நம்பியிருக்கும் வணிகங்கள் எப்போதும் ஏற்ற தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும், ஆனால் வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதே முக்கியம் என்றும் அவர் கூறினார். இந்தியாவின் ஜவுளித் தலைநகரான திருப்பூர் இதற்கு ஒரு சரியான உதாரணம் என்றும் திருப்பூர் டெக்ஸ்டைல் தொழிலதிபர்களைப் பாராட்டினார்.
More From GoodReturns

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி



Click it and Unblock the Notifications