கொரோனா ஆட்டத்தால் மொத்தமாக மூடிய 2020.. 2021லாவது நிலைமை சரியாகுமா.. குமுறலில் திருப்பூர்வாசிகள்!

பின்னலாடை நகரம் என்று செல்லமாக அழைக்கப்படும் திருப்பூரின் இன்றைய நிலை தெரியுமா உங்களுக்கு. எந்த நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த நகரம் மொத்தமும், தற்போது மயான அமைதியாய் காட்சி அளிக்கிறது.

வரலாற்றில் இப்படி ஓரு காட்சியை பார்த்தவரும் இருப்பார்களா? இனி இப்படி ஒரு நிகழ்ச்சியினை நம் வரும் சந்ததிகளும் பார்க்கக் கூடாது எனலாம். அந்தளவுக்கு பரபரப்பாக காணப்பட்ட ஒரு நகரத்தில, அத்தியாவசியம் தவிர இன்று அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.

எங்கேனும் ஒரு சிறிய நிறுவனம் முகத்தில் அணியும் மாஸ்க், தவிர மருத்துவர்கள் அணியும் கோட் என தைத்தாலும் 99.9% நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்பதே உண்மை.

வேலை இல்லை

வேலை இல்லை

பெரும்பாலும் இங்கு தங்கி வேலை பார்க்கும் ஊழியர்கள் தொழிலாளர்கள் மற்ற மாநிலங்கள், மற்ற மாவட்டங்களை சார்ந்தவர்களாகத் தான் இருப்பர், பலரும் இங்கிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பியிருந்தாலும், சிலர் திருப்பூரிலே இருப்பதையும் பார்க்க முடிகிறது. அங்கு சில தொழிலாளர்களிடம் பேசிய போது, கடைசியாக மார்ச் மாதத்தில் வேலை சென்று சம்பளம் வாங்கியது தான். அதன் பிறகு தினசரி தொழிலாளர்களுக்கு வேலையும் இல்லை.

வருமானம் சுத்தமாக இல்லை

வருமானம் சுத்தமாக இல்லை

வேலை இல்லாததால் வருமானம் என்பது சுத்தமாக இல்லை. கையில் காசு இல்லாததால் கடன் வாங்கி செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் கடன் கொடுக்கவும் தற்போது ஆளில்லை. ஏன் கையில் இருக்கும் நகைகளை அடமானம் வைக்கலாம் என்றால் கூட கடைகள் இல்லை. ஏனெனில் தாங்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள். வேலை செய்த நாட்களுக்கு சம்பளம். இல்லையெனில் சம்பளம் இல்லை. அப்படி இருக்கையில் நாங்கள் யாரிடனும் சென்று உதவிகள் கூட கேட்க முடியவில்லை.

அரசின் உதவி கிடைக்க வாய்ப்பில்லை

அரசின் உதவி கிடைக்க வாய்ப்பில்லை

இதே நாங்கள் வெளி மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து வேலை செய்வதால், வீட்டு வாடகை, தண்ணீர் முதல் கொண்டு விலை கொடுத்து தான் வாங்கி வருகிறோம். இன்னும் உண்மையை சொல்லப்போனால் எங்களுக்கு ரேஷன் கார்டு முதல் கொண்டு எங்கள் சொந்த மாவட்டங்களில் தான் உள்ளது. இதனால் எங்களால் அரசின் உதவியையும் பெற முடியவில்லை.

 வாடகை மொத்தமும் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்

வாடகை மொத்தமும் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்

வீட்டு வாடைகையை பொறுத்த வரையில். தற்போதைக்கு பிரச்சனை இல்லை என்றாலும், வேலைக்கு செல்லும் போது மொத்தமும் கொடுக்க வேண்டும். ஆனால் மூன்று மாதம் கழித்து சென்றாலும் அதனை முழுவதும் செலுத்த வேண்டிய நிலையில் தான் உள்ளோம். ஆக நாங்கள் எல்லா விதத்திலும் பிரச்சனையைத் தான் சந்தித்து வருகிறோம்.

வாழ்வாதாரம் பாதிப்பு

வாழ்வாதாரம் பாதிப்பு

லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதால் எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கி போயுள்ளது. இதனால் சப்பாட்டுக்கே கூட கஷ்டப்படும் நிலை தான் நிலவி வருகிறது.
எங்களுக்கு 500 ரூபாய் வரை சம்பளம் என்றால், வாரம் 3000 ரூபாய் சம்பாதிக்கிறோம். மாதம் 12,000 ரூபாய் சம்பாதிக்கிறோம் எனில் வீட்டு வாடகை, தண்ணீர், மின்சாரம் என அனைத்தும் சேர்த்து 5,000 ரூபாய் எளிதாக அதற்கே சென்று விடும். அது போக எங்களின் போக்குவரத்து, இப்படி எல்லாம் கூட்டி கழித்து பார்க்கும் போது எங்களால் எதுவும் மிச்சம் செய்யமுடியாமல் தான் போகும்.

பாதி சம்பளமாவது கிடைக்குமா?

பாதி சம்பளமாவது கிடைக்குமா?

இதே எங்களில் சிலர் நிரந்தர ஊழியர்களாக இருந்தாலும் கூட, அவர்களுக்கும் பாதி சம்பளம் தான் என்று நிறுவனங்கள் கூறுகின்றன. இன்னும் சொல்லாப்போனால் போகிற போக்கில் அதுவாவது வருமா? என்பதே சந்தேகமாகத்தான் உள்ளது. ஏனெனில் கடந்த ஜனவரி மாதத்தில் அனுப்பிய ஏற்றுமதிக்கே இன்று வரை பில்கள் செட்டில் ஆகமால் இருக்கும் நிலையில், தற்போது புதிய ஆர்டர்களும் அனுப்ப முடியவில்லை. நம்மிடம் சரக்கு வாங்கும் நாடுகளும் நம்மை விட மோசமாக உள்ளன.

2020 இருண்ட காலம் தான்

2020 இருண்ட காலம் தான்

ஆக இந்த நிலை இன்னும் எத்தனை மாதங்களுக்கு நீடிக்கும் என தெரியவில்லை. மே 3க்கு பிறகு நிறுவனங்கள் திறக்கப்பட்டாலும், நிலைமை சீரடைய இன்னும் 6 மாத காலம் ஆகும். ஆக திருப்பூர் வாசிகளுக்கு 2020 என்பது ஒரு இருண்ட காலம் தான். 2021ல் தான் எங்களது துறை மீண்டு வர வாய்ப்பிருக்கிறது என்றும் கூறுகின்றனர். ஏற்கனவே ஜிஎஸ்டியால் மிக நலிவடைந்து போயுள்ள சிறு நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் என்ன ஆவார்கள் என்றே தெரியவில்லை.

இவ்வளவு நிலுவை

இவ்வளவு நிலுவை

இதே கடந்த மாதத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் அறிக்கையின் படி, ஆர்டர்கள் குறைந்துள்ளதோடு, ஏற்றுமதி செய்ததற்கான பாக்கித் தொகையும் இன்னும் வந்துசேரவில்லை. குறிப்பாக கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் ஏற்றுமதி பாக்கித் தொகை ரூ.5,000 கோடிக்கு மேல் இருப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்து இருந்தது.

பெரிய பாதிப்பு தான்

பெரிய பாதிப்பு தான்

இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நகரங்களில் ஒன்றான திருப்பூரில் கொரோனா பாதிப்பு தொழில் ரீதியாக மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஜவுளித் தொழிலை மையமாகக் கொண்ட இந்த நகரத்தில் ஏற்றுமதி வாய்ப்புகள் கொரோனாவால் குறைந்துள்ளன. திருப்பூரிலிருந்து இங்கிலாந்து, ஸ்பெயின், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகமான அளவில் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆர்டர்கள் குறைவு

ஆர்டர்கள் குறைவு

கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்நாடுகள் திருப்பூருக்கான ஆர்டர்களைக் குறைத்துள்ளன. இதனால் தொழிலாளர்கள் தங்களது வாழ்வதாரத்தினை இழந்து வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டும் அல்ல இந்த ஏற்றூமதியாளர் சங்கம் தங்களது நிறுவனங்கள் முற்றிலும் தங்களது வருவாயினை இழந்துள்ள நிலையில், வரவேண்டிய தொகையினை கூட வசூல் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.

கால அவகாசம் வேண்டும்

கால அவகாசம் வேண்டும்

இதன் காரணமாக வங்கிகளில் வாங்கிய கடனை கூட செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு ஒரு வருட கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் மட்டும் அல்ல, இந்த ஏற்றுமதி துறையினை நம்பியுள்ள சாயபட்டறைகள், நூல் வியாபாரம், டிசைனிங், எம்பிராய்டரி, கோன், யார்ன் ஏற்றுமதி, என பலரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஆக திருப்பூரினை பொருத்த வரையில் மக்களுக்கும் சரி, நிறுவனங்களும் இந்த கொரோனாவினால் பெருத்த அடியிணை காண்பார்கள் என்று இந்த பெயர் கூற விரும்பாத தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+