2023 ஆம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு நிறுவனம் செலவைக் குறைக்கவும், மறுசீரமைப்பு என்ற பெயரிலும் ஊழியர்களைக் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம் செய்து வந்தது. ஆனால் 2024 ஆம் ஆண்டு ஊழியர்களுக்கானது என்றால் மிகையில்லை.
ஆமாங்க, உலகின் 8 முக்கியப் பொருளாதார நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வில் சுமார் 28 சதவீத ஊழியர்கள் 2024ல் தற்போது பணியாற்றும் நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற உள்ளதாக அறிவித்துள்ளனர். இதில் குறிப்பாக இந்தியாவில் சுமார் 26 சதவீதம் பேர் தங்களுடைய பணியைக் கட்டாயம் மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Boston Consulting Group குரூப் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய 8 நாடுகளில் 11000 ஊழியர்கள் மத்தியில் 20 காரணிகளில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் மூலம் ஊழியர்களைக் காட்டிலும் நிறுவனமும், நிர்வாகமும், நிறுவனத்தின் ஊழியர்கள் தான் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த ஆய்வில் பங்கு பெற்ற 50 சதவீதம் பேர் எதிர்பார்ப்பது நல்ல சம்பளம், வொர்க் லைப் பேலென்ஸ், பாதிக்காத வேலை நேரம், இதர அடிப்படையான விஷயங்களைத் தான் எதிர்பார்க்கின்றனர். இதைக் கூட பூர்த்திச் செய்ய முடியாத ஊழியர்களுக்குத் தான் தற்போது பெரும் பிரச்சனை.
மீதமுள்ள 50 சதவீத ஊழியர்கள் தங்களுடைய எமோஷ்னல் தேவைகளுக்கு மதிப்பு கொடுத்து, ஆதரவு அளிக்க வேண்டும், வேலையை என்ஜாய் செய்து பணியாற்றும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
ஆனால் பணி மாற்றம் செய்ய முக்கியமாக இந்த 11000 ஊழியர்களும் முன்வைப்பது சம்பளம், சம்பளம் சார்ந்த சலுகை, வொர்க் லைப் பேலென்ஸ், புதிதாகக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஆகியவற்றைத் தான் கூறுகிறார்கள்.
இந்திய ஊழியர்களில் 26 சதவீதம் பேர் தங்களுடைய பணியை மாற்றுவதில் தயாராக இருக்கும் வேளையில் 2023 ஆம் ஆண்டின் மெகா பணிநீக்கத்திற்குப் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications