அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் வேளையில், அமெரிக்க அரிவித்து புதிய வரிக்கு சீனா மீண்டும் பதிலடி கொடுத்துள்ளது. டிரம்ப்-ன் முடிவுகளையும், செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் மக்கள் இந்த விரி விதிப்பால் உலகளவில் ரெசிஷன் உருவாகும் அச்சம் உள்ளது.
இந்த நிலையில் சீன அரசு, அமெரிக்காவின் மோசமான வரி விதிப்பு முபைக்கு எதிராக புதிதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்க பொருட்களின் மீது 125% வரியை விதிப்பதாக அறிவித்துள்ளது. இது முன்பு அறிவிக்கப்பட்ட 84% வரியிலிருந்து தற்போது அமெரிக்கா விதிக்கும் அதே 125 சதவீத வரியை விதிக்க உள்ளது. ஆனா, இதில் ஒரு டிவிஸ்ட் உள்ளது.

இந்த புதிய வரி விதிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பதட்டத்தை அதிகரிப்பதோடு, அமெரிக்காவின் ஆதிக்கத்தை உடைக்க சீனா தயாராக இருப்பதையும் உலக நாடுகளுக்கு காட்டுகிறது. சீன நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் சீன மாநில கவுன்சில் வரி ஆணையம் புதிய வரி விதிப்பு குறித்து முக்கியமாந அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில் அமெரிக்கா, சீன இறக்குமதிகள் மீது அதிக வரிகளை விதிப்பது சர்வதேச வர்த்தக விதிகள், அடிப்படை பொருளாதாரக் கொள்கைகள் எதிரானது என்றும், டிரம்ப்-ம், அமெரிக்க அரசும் காமென் சென்ஸ் இல்லாமல் சீனா மீதும் உலக நாடுகள் மீதும் வரியை விதித்து வருகிறது என விமர்சனம் செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நியாயமற்ற வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலடியாகவே இந்த புதிய வரி விகிதங்கள் அமல்படுத்தப்படுவதாக சீன அரசு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் உடனடி விளைவாக, அமெரிக்க பங்குச் சந்தை பியூச்சர்ஸ் ஒப்பந்தங்கள் சரிவை சந்தித்தன.
டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளுக்கு 90 நாட்கள் வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தாலும், 10 சதவீதம் என்ற அடிப்படை வரி நடைமுறையில் தான் உள்ளது. இதேபோல் அமெரிக்கா, சீன இறக்குமதிகள் மீது 145% வரி விதிப்பில் தான் பொருட்களை இறக்குமதி செய்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதிதாக வெளியிட்ட நிர்வாக உத்தரவின் மூலம், சீனப் பொருட்களுக்கு 84 சதவீதமாக இருந்த வரியை 125 சதவீதமாக உயர்த்தி உள்ளார். ஆனால் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே ஃபென்டானில் தொடர்பான இறக்குமதிகளுக்கு 20 சதவீத கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சீன பொருட்கள் மீதான மொத்த வரி விதிப்பு 145 சதவீதமாக அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications