நம் நாட்டில் முன்பை காட்டிலும் படித்த இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வேலை கிடைப்பதுதான் பெரிய விஷயமாக உள்ளது. பல இளைஞர்கள் நல்ல வேலைக்காக பல ஆண்டுகளாக முயற்சி செய்து வருகின்றனர். இதுதான் இன்றைய இளைஞர்களின் நிலவரம்.
இந்த சூழ்நிலையில், டாடா குழுமத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் 3,000க்கும் அதிகமான பணியாளர்களை பணிநியமனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நிச்சயமாக இது வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும்.

டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டி.ஐ.டி.சி.ஓ.) ஆகியவற்றின் கூட்டு வர்த்தக நிறுவனம் டைட்டன். இந்நிறுவனம் ஜூவெல்லரி, வாட்ச் மற்றும் கண்கண்ணாடி போன்ற ஆடம்பர அணிகலன்கள் உற்பத்தி மற்றும் விற்பனை மற்றும் பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் 3,000க்கும் அதிகமான தொழிலாளர்களை பணிநியமனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக டைட்டன் அறிவித்துள்ளது. இந்நிறுவனம், தரவு பகுப்பாய்வு, இணைய பாதுகாப்பு, தயாரிப்பு மேலாண்மை, டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் புதிய ஏஜ் திறன்கள் கொண்ட நிபுணர்களை பணியமர்த்த விரும்புகிறது.
இது தொடர்பாக டைட்டன் நிறுவனத்தின் கார்ப்பரேட் மற்றும் ரீடெய்ல் பிரிவு மனித வள அதிகாரி பிரியா மதிலகத் பிள்ளை கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகளில் எங்கள் வணிகத்தை ரூ.1,00,000 கோடி வணிகமாக மாற்றுவதை நோக்கி உற்சாகமான பயணத்தை தொடங்குகிறோம்..
அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 3,000க்கும் அதிகமானவர்களை பணியில் சேர்க்கும் எங்களின் தீவிரமான உத்தியானது, மாறுபட்ட மற்றும் திறமையான பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
எங்கள் சொந்த மக்களை வளர்ச்சியடைய செய்வதோடு, இளைஞர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களை கொண்டு வரவும் இது உதவுகிறது என்று நாங்கள் நம்புகிறோம். இது எங்கள் வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை விரைவுப்படுத்தும், தொழில்துறையில் எங்கள் நிலையை வலுப்படுத்தும் என்று தெரிவித்தார்.
இந்நிறுவனம், புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில கவனம் செலுத்தும் வகையில், அடுத்த 2-3 ஆண்டுகளில் என்ஜினீரியங் பணிகளில் பணியாளர்களை 50 சதவீதம் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. வடஅமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தனது சர்வதேச வர்ததகத்தை விரிவுப்படுத்தும் நோக்கில், அடுத்த 5 ஆண்டுகளில் தனது சர்வதேச பணியாளர்கள் எண்ணிக்கையை 10 சதவீதம் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
டைட்டன் நிறுவனம் நிறுவனத்தில் பெண் பணியாளர்கள் எண்ணிக்கையை விரும்புகிறது. இதற்காக இந்நிறுவனம் அண்மையில் பெண்களை மையமாக கொண்ட ரிட்டர்ன் ஷிப் திட்டத்தை அறிமுகம் செய்தது. இது கடந்த ஜூன் காலாண்டில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 40 சதவீதம் பெண்களாக நியமனம் செய்ய உதவியது என்று அந்நிறுவனம் தெரிவித்தது


Click it and Unblock the Notifications