நகைகளை வாங்கித் தள்ளிய மக்கள்.. பலே வளர்ச்சி கண்ட டாடா குழும நிறுவனம்..!

ஜீவல்லரி மற்றும் பேஷன் நிறுவனமான டைட்டன் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமானது 2021ன் கடைசி மூன்று மாதங்கள் 36 சதவீத வளர்ச்சியினை கண்டது.

இது விழாக்கால பருவத்தில் தேவையானது மீண்டு வந்த நிலையில், இந்த நிறுவனத்தின் வளர்ச்சியானது மீண்டு வந்துள்ளது.

கடந்த அக்டோபர் மற்றும் நவம்பரில் பண்டிகை காலத்தில் தேவை அதிகரித்த நிலையில், இது இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்ததாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Titan co announced strong sales in third quarter/நகைகளை வாங்கித் தள்ளிய மக்கள்.. பலே வளர்ச்சி கண்ட டாடா குழும நிறுவனம்..!

வளர்ச்சி விகிதம்

வளர்ச்சி விகிதம்

இதற்கிடையில் தான் ஜீவல்லரி பிரிவில் வருவாயானது ஆண்டுக்கு 37% அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த கடந்த ஆண்டில் நகைப் பிரிவில் இந்த நிறுவனம் 6,249 கோடி ரூபாய் வருவாயினை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது இந்த பிரிவில் இந்த வளர்ச்சி விகிதமானது சிறந்ததொரு வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.

புதிய வாடிக்கையாளர்கள் வரத்து

புதிய வாடிக்கையாளர்கள் வரத்து

முந்தைய ஆண்டினை காட்டிலும் வாக் இன் வாடிக்கையாளர்கள் கடந்த ஆண்டில் அதிகமாக இருந்ததனர். இதனால் இந்த விற்பனையானது கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக புதியதாக வந்து வாங்கியவர்களின் எண்ணிக்கையானது மொத்த வளர்ச்சி விகிதத்தினை விட அதிகமாக இருந்தது. தனிஷ்க்கின் பிரத்யேகமான கவனம் வெற்றி கண்டுள்ளது.

பிரிவு வாரியாக வளர்ச்சி

பிரிவு வாரியாக வளர்ச்சி

ஜீவல்லரி வாட்ச் -கள் மற்றும் அணிகலன்கள் மூன்றாவது காலாண்டில் 37% அதிகரித்துள்ளது.

கண் கண்ணாடிகள் வணிகத்தில் 27% வளர்ச்சியும், மற்ற வணிகத்தில் 44% விற்பனையும். TEAL 9% வளர்ச்சியும், காரட்லேன் 64% வளர்ச்சியும் கண்டுள்ளது.

குறிப்பாக தனிஷ்க்கின் தீபாவளி அறிமுகமான உத்சா ம்ற்றும் கலர் மீ ஜாய் உள்ளிட்ட கலெக்ஷன்கள் நல்ல வரவேற்பினையும் பெற்றது.

இது தவிர இன்னும் பல பிராண்டுகளையும் தனிஷ்க் அறிமுகம் செய்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

டயர் 1 நகரங்களில் வளர்ச்சி

டயர் 1 நகரங்களில் வளர்ச்சி

டயர் 1 நகரங்களில் வளர்ச்சி விகிதமானது பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்த அளவு வளர்ச்சியினை எட்டியுள்ளது.

இதற்கிடையில் தனிஷ்க்கின் நெட்வொர்க் விரிவாக்கமானது மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது. துபாயில் மட்டும் 14 கடைகள் (இதில் 2 கடைகள் புதிய கடைகள் உள்பட) உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+