இந்தியாவின் புகழ்பெற்ற கைக்கடிகார நிறுவனமான டைட்டன் பணக்கார இந்தியர்களை இலக்காக வைத்து புதிய வகையிலான ஆடம்பர கைக்கடிகாரத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஜீயஸ் (Zeus) என்ற பெயரில் அடுத்தடுத்த வரிசையில் பல்வேறு ஆடம்பர கைக்கடிகாரங்களை வெளியிட டைட்டன் நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.
அடுத்த நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குள் ஜீயஸ் என்ற பெயரில் கடைகளை நிறுவி அந்த பிராண்டின் கீழ் 2 முதல் 20 லட்சம் ரூபாய் வரை விலை கொண்ட கைக்கடிகாரங்களை விற்பனை செய்ய உள்ளது.

பெரும்பாலும் ஸ்விஸ் ரக கைக்கடிகாரங்களே இந்த பிராண்டின் கீழ் விற்பனையாக உள்ளன. ஏன் ஸ்விஸ் கைக்கடிகாரங்களுக்கு டைட்டன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற கேள்வி எழலாம். கடந்த ஆண்டு டைட்டன் கைக்கடிகாரங்கள் பிரிவானது விற்பனையில் 19% வளர்ச்சி அடைந்தது.
அதில் குறிப்பாக பிரீமியம் ரக கைக்கடிகாரங்களான ஹீலியோஸ் ரகத்தின் விற்பனை 34% என உயர்வு கண்டது. ஹீலியோஸிலும் குறிப்பாக ஸ்விஸ் கைக்கடிகாரங்கள் 69% விற்பனை வளர்ச்சியை எட்டின. எனவே தான் ஸ்விஸ் கடிகாரங்களை கொண்டு டைட்டன் நிறுவனம் ஆடம்பர கைக்கடிகாரங்கள் பிரிவில் புதிய பிராண்டை கொண்டு வருகிறது.
தங்களின் புதிய ஆடம்பர கைக்கடிகார பிராண்டிற்காக டைட்டன் நிறுவனம் 10க்கும் மேற்பட்ட ஸ்விஸ் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதாவது ஜீயஸ் பிராண்டின் கீழ் ஸ்விஸ் நிறுவனங்கள் தங்களின் கைக்கடிகாரங்களை பிரத்யேகமாக விற்பனை செய்ய வேண்டும் என ஒப்பந்தங்கள் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இன்னும் ஐந்து மாத காலத்தில் டைட்டன் நிறுவனம் முதல்கட்டமாக மும்பையில் ஜீயஸ் ரீடெய்ல் கடையை திறந்துவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து 2025ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் மேலும் இரண்டு கடைகளை திறக்க டைட்டன் திட்டமிட்டுள்ளது.
ஆடம்பர கைக்கடிகாரங்கள் விற்பனையில் கவனம் செலுத்தினாலும் சாமானிய மக்களுக்கான கைக்கடிகாரங்கள் பிரிவிலும் டைட்டன் பல கைக்கடிகாரங்களை அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே ஹீலியோஸின் கீழ் கடந்த சில ஆண்டுகளாக பிரீமியம் கைக்கடிகாரங்களான, SWAROVSKI, TISSOT, Michael Kors, Giorgio Armani, Movado Group, Inc, Versace, Balmain, Xylys Watches & Charriol ஆகியவற்றை அறிமுகம் செய்தது.
இந்தியாவின் கைக்கடிகார விற்பனையில் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது டைட்டன் வேர்ல்டு. இந்தியாவில் மட்டும் டைட்டன் வேர்ல்டு 665 கடைகளை வைத்து நடத்தி வருகிறது. இளைஞர்களை இலக்காக கொண்டு டைட்டன் கொண்டு வந்த ஃபாஸ்ட் டிராக் பிராண்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதற்கு சொந்தமான 218 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications