உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் பிராண்டாக இருக்கும் ஆப்பிள் தனது ஆதிக்க நிலையை சாம்சங் நிறுவனத்திடம் இழந்துவிட்ட நிலையிலும், சீனாவில் இருந்து வெளியேறிய நிலையிலும் இந்தியா மட்டுமே முழுமையாக நம்பி தனது புதிய வர்த்தக பாதையை உருவாக்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் தனது சப்ளையர்கள், ஒப்பந்த உற்பத்தியாளர்களுடன் இணைந்து இந்தியாவில் மிகப்பெரிய உற்பத்தி களத்தை அமைத்துள்ள வேளையிலும், இன்னும் சில முக்கியமான உதிரிப்பாகங்கள் சீனாவில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் இந்தியாவுக்கு வந்துகொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் கேமராக்களுக்கான துணை பாகங்களை (sub-components) உற்பத்தி செய்ய முன்னணி நிறுவனங்களான முருகப்பா குழுமம் மற்றும் டாடா குழுமத்தின் டைட்டன் கம்பெனி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பேச்சுவார்த்தை வெற்றி அடைந்தால், சீனாவிலிருந்து தனது உற்பத்தி செயல்பாடுகளை இந்தியாவுக்கு மாற்றுவதற்கான ஆப்பிளின் முயற்சியில் இது ஒரு மைல் கல் ஆக இருக்கும். இதெல்லாம் ஓகே ஆனா ஏன் முருகப்பா குழுமம் மற்றும் டைட்டன் கம்பெனி-ஐ தேர்வு செய்துள்ளது.
தற்போது இந்தியாவில் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலைகள் இருந்தாலும், கேமராக்கள் உள்ளிட்ட முக்கிய பாகங்கள் இன்னும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சனையைத் தீர்க்கவே முருகப்பா குழுமம் அல்லது டைட்டன் கம்பெனி ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்க ஆப்பிள் நிறுவனம் ஆர்வமாக உள்ளது.
ஆப்பிள் துவங்கியுள்ள இந்த பேச்சுவார்த்தை ஐந்து முதல் ஆறு மாதங்களில் கூட்டணிக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டும் நடந்துவிட்டால் தமிழ்நாடுக்கு ஜாக்பாட் தான், காரணம் முருகப்பா குழுமம் தமிழ்நாட்டில் தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு நிறுவனம், டைட்டன் ஓசூரில் தொழிற்சாலையை வைத்துக்கொண்டு இயங்கி வருகிறது.

ஆப்பிள் ஐபோன்-களின் தனிச்சிறப்பான அம்சங்களில் ஒன்றான கேமரா, தற்போது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று எனத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டைட்டன் கம்பெனி கடிகாரங்கள் மற்றும் நகைகள் போன்ற துல்லியமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது. சென்னையை தலைமையிடமாகக் கொண்ட முருகப்பா குழுமம், பொறியியல், நிதி சேவைகள் மற்றும் வேதியியல் துறைகளில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட தொழில் குழுமமாகும். இது தான் ஆப்பிள் இவ்விரு நிறுவனங்களைத் தேர்வு செய்ய முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த கூட்டணி மூலம், கேமராக்களுக்கான துணை பாகங்களை உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், முழு கேமராக்களையும் கூட இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிகிறது. இது நடந்தால், இந்தியாவில் உள்ள மொபைல்உதிரி பாகங்கள் உற்பத்தி துறை முக்கிய உயரத்தை அடையும்.
அதே நேரத்தில், சீனாவை விட உற்பத்தி செலவைக் குறைத்து, லாபத்தை அதிகரிக்கும் வாய்ப்பும் ஆப்பிள் நிறுவனத்திற்குக் கிடைக்கும். இந்த பேச்சுவார்த்தை வெற்றி அடையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications