சென்னை: டைடன் நிறுவனம் வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. 2023-24 நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், டைட்டன் நிறுவனம் 86 புதிய கடைகளைத் திறந்துள்ளது, இது நிறுவனத்தின் விற்பனையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. தற்போது, டைட்டன் நாடு முழுவதும் 3,035 ஷோரூம்களைக் கொண்டுள்ளது.
மார்ச் 31, 2024 அன்று முடிவடைந்த 4 வது, காலாண்டில் கடந்த ஆண்டின் இதே 4 வது காலாண்டுடன் ஒப்பிடும்போது டைடன் நிறுவனத்தின் வருவாய் 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று டைட்டன் நிறுவனம் அறிவித்துள்ளது.

டைடன் நிறுவனத்தின் முக்கிய நகைப் பிரிவு கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் 19 சதவீத வளர்ச்சியைக் கண்டது, புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் ஏற்கனவே உள்ளவர்கள் இந்நிறுவனத்திற்கு அதிக வரவேற்பு அளிப்பதால் இத்தகைய வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியானது தங்க நகைகள் மற்றும் மற்றப் பிரிவுகள் இரண்டிலும் விற்பனையில் இரட்டை இலக்கத்தை அடைந்துள்ளது.
தங்கம் மற்றும் வைர நகை ப்ராண்டான தனிஷ்க் துபாய் மற்றும் சிகாகோவில் (அமெரிக்கா) புதிய கடைகளைத் திறந்துள்ளது. இந்தியாவில், ஒட்டுமொத்தமாக 27 புதிய கடைகள் தொடங்கப்பட்டன. அவற்றில் தனிஷ்க் ப்ராண்டின் கீழ் 11 ஷோரூம்கள் உள்ளன.
கடிகாரங்கள் மற்றும் அணியக்கூடிய பொருட்களுக்கான உள்நாட்டு வணிகம் கடந்த ஆண்டை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் அனலாக் வாட்சுகள் மூலம் வந்த வருவாயில் 7 சதவிகித வளர்ச்சியும், அணியக்கூடிய பொருட்களில் 2 சதவிகித வளர்ச்சியும் அடங்கும். டைடன் மற்றும் சர்வதேச பிராண்டுகளை வழங்கும் ஹீலியோஸ் சேனல், வலுவான இரட்டை இலக்க அதிகரிப்புடன், அனலாக் வாட்ச்களில் வேகமான வளர்ச்சியைக் கண்டது. மொத்தத்தில், டைட்டன் வேர்ல்டில் 10, ஹீலியோஸில் 20 மற்றும் ஃபாஸ்ட்ராக்கில் 14 உட்பட 44 புதிய கடைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட கண் பராமரிப்பு பிரிவான டைடன் ஐ பிளஸ் வருவாய் 1 சதவீத சரிவை சந்தித்துள்ளது.
வளர்ந்து வரும் வணிகங்களில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தனீரா வின் வருவாய் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. வாசனை திரவியங்கள் மற்றும் ஃபேஷன் பாகங்கள் மூலம் வருவாய் ஒட்டுமொத்தமாக 12 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, வாசனை திரவியங்கள் மீதான வருவாய் கடந்த ஆண்டை விட 9 சதவீதம் மற்றும் ஃபேஷன் அக்சஸரீஸ்கள் 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் வணிகமானது கடந்த ஆண்டை விட 30 சதவீதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கண்டுள்ளது. டைட்டன் நிறுவனம் உலகளவில் ஐந்தாவது பெரிய ஒருங்கிணைந்த சொந்த பிராண்ட் வாட்ச் உற்பத்தியாளர் ஆகும். இது இந்தியாவில் வாட்ச் மற்றும் நகைத் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதற்கும், அனுபவமிக்க சில்லறை விற்பனையில் முன்னணியில் இருப்பதற்காகவும் நன்கு அறியப்பட்ட ஒரு நிறுவனமாகும்.
டாடா நிறுவனம், 2024 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், ஸ்டான்டலோன் நிகர லாபம் ரூ.1,040 கோடியாக உயர்ந்துள்ளது, இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.951 கோடியாக இருந்தது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications