இந்தியாவின் முன்னணி நகை மற்றும் லைப்ஸ்டைல் நிறுவனமான டைட்டன் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் சிறிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. வருவாய் கணிசமாக அதிகரித்திருந்தாலும், லாபம் 0.6% குறைந்து ரூ.1,047 கோடியாக குறைந்துள்ளது.
மோடி 3.0 ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரியில் ஏற்பட்ட குறைப்பு இந்த லாப வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். வரி குறைப்புக்கு முன்பு இருந்த சரக்குகளில் விற்பனையில் மூலம் இழப்பு ஏற்பட்டதால் நிறுவனத்தின் லாபத்தில் பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், அனைத்து வணிக பிரிவுகளின் வளர்ச்சியிலும் முதலீடு செய்வதற்கான தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளது டைட்டன் நிறுவனம்.

வணிக பிரிவுகளின் வாரியாக பார்க்கும்போது, நகை வணிகம் முக்கிய வருவாய் ஈட்டும் பரிவிகா தொடர்ந்து இருக்கிறது. வருடாந்திர அடிப்படையில் இப்பிரிவு 26% வளர்ச்சியுடன் ரூ.14,697 கோடியை எட்டியது. டைட்டன் நிறுவனத்தின் தங்க நகைகள் மற்றும் நாணயங்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து பிரபலமான தேர்வாக இருந்தன.
கடிகாரங்கள் மற்றும் அணியக்கூடிய தொழில்நுட்பங்கள் பிரிவும் பாசிடிவ் ஆன வளர்ச்சியைக் காட்டியது. மொத்த வருவாய் வருடாந்திர அடிப்படையில் 15% அதிகரித்து ரூ.1,128 கோடியை எட்டியது. இருப்பினும், சராசரி விற்பனை விலை மற்றும் விற்பனை அளவு குறைந்ததால் வியரபிள் தொழில்நுட்பப் பிரிவில் 20% வருவாய் வீழ்ச்சி ஏற்பட்டது.
ஐ கேர் பிரிவும் இக்காலாண்டில் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்தது. மொத்த வருவாய் வருடாந்திர அடிப்படையில் 16% அதிகரித்து ரூ.194 கோடியை எட்டியது. இந்த பிரிவில் சர்வதேச பிராண்ட் விற்பனை குறிப்பாக வலுவான வளர்ச்சியைக் கண்டது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை ஒப்பிடுகையில் 56% அதிகரித்துள்ளது.
Taneira (இந்திய உடை), வாசனை திரவியங்கள் மற்றும் ஃபேஷன் ஆபரணங்கள் உள்ளிட்ட புதிய வணிகங்களும் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களித்துள்ளன. எமர்ஜிங் பிரிவின் மொத்த வருவாய் வருடாந்திர 5% அதிகரித்து ரூ.118 கோடியை எட்டியது.


Click it and Unblock the Notifications